உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 TU கரகம் விடும் திருவிழா பெயர் என்னவென்று திரும்பத் திரும்பக் கேட்ட மாய வரைத் திகைக்க வைத்து விட்டு பொன்னர், சங்கர், வீரமலைச் சாம்புவன் ஆகிய மூன்று வாலிபர்களும் குறுக்குப்பாதை யிலேயே சிங்கக் குட்டிகளைப்போல நடந்து சென்று காவிரி யின் தென்கரையில் உள்ள வாங்கலம்மன் கோயிலை அடைந் தனர். காவிரியில் வெள்ளம் இரு கரைகளையும் தழுவிச் சென்று கொண்டிருந்தது. கரையோரத்து மரங்களில் இருந்து காற்றின் கரங்களால் பறிக்கப்பட்ட மலர்களையும், செடிகொடி களில் பூத்துக் குலுங்கிய மலர்களையும் தனது அலைக்கரங்களில் ஏந்தி நொங்கும் நுரையுமாக ஒலியெழுப்பிக் கொண்டு வரும் காவிரி மங்கையின் காட்சியையும் மிதந்து செல்லும் பூக்களைப் பின்தொடர்ந்து பறந்து கொண்டிருக்கும் வண்டினம் எழுப்பும் இசையின் மாட்சியையும் கண்ட மூன்று வாலிபர் களுக்கும் தங்களின் ஆசான் ராக்கியண்ணன் பயிற்றுவித்த சிலப்பதிகாரப் பாடல் நினைவுக்கு வரவே காவிரியைக் கண் கொட்டாமல் பார்த்து நின்றனர். - "மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி . என்ற பாடலை அவர்கள் இசையுடன் முணுமுணுத்து உற் சாகத்தை வெளிப்படுத்தினர். வாங்கலம்மன் கோயிலை உற்றுப் பார்த்து நின்ற வீரமலைச் சாம்புவன்; இந்தக் கோயில் கோளாத்தாக் கவுண்டர் ஆட்சி யிலே கட்டப்பட்டதாகத் தனது ஆசான் ராக்கியண்ணன் ஒரு முறை சொன்னதை நினைவுகூர்ந்தான். கோளாத்தாக் கவுண் டர்; பொன்னர் சங்கருக்குப் பாட்டானார்தான் என்பது அவர் களுக்கும் தெரியவில்லை வீரமலைச் சாம்புவனுக்கும் தெரிய 64