உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - முகப்பைத் தாண்டி, கோட்டையின் இரண்டாவது சுற்றடைப் புச் சுவரைத் தாண்டி அடுத்த முகப்பு வாயிலின் வழியாக வண்டி நுழைந்தபொழுது; 'வேல்! வேல்! வீரவேல்! வெற்றி வேல்! என்று ஒரு பெரும் ஒலி! ஆம்; பொன்னர் - சங்கர் வீரமலை மூவரும் எழுப்பிய ஒலி! அந்த ஒலி அடங்குவதற்குள் கோட்டைக்கு வெளியே வீழ்ந்து கிடந்த ஆரிச்சம்பட்டி வீரர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் நிமிர்ந்தெழுந்தனர். எழுந்த வேகத்தில் ரத வண்டியைச் சுற்றிச் சூழ்ந்து வந்த ராச்சாண்டார்மலை வீரர்கள் மீது தாக்குதல்! - பொன்னர் சங்கர் இருவரும் உருவிய வாளுடன் அந்த வீரர் கூட்டத்தில் புயல் போலப் புகுந்தனர். சங்கரைத் தளபதி திருமலை மடக்கிக் கொண்டான். பொன்னர் ஆரிச்சம்பட்டி வீரர்களுடன் ராச்சாண்டார் மலைவீரர்களை எதிர்த்துப் போர் புரிந்தான். இடையில் வீரமலை, ரதவண்டியில் பாய்ந்து வையம் பெருமானைப் பிணைத்திருந்த சங்கிலியை அறுத்தெறிந்தான்! தளபதி திருமலையின் வாள் சங்கரின் தலையைப் பிளந்து விடக் கூடும் என அஞ்சிப் பதறி சின்னமலைக்கொழுந்து துடித்துப் பதறியபோது சங்கர் அந்த மாமிசமலையின் நெஞ் சில் தனது வாளைப் பாய்ச்சிக் கீழே வீழ்த்தினான். தளபதி பிணமானது கண்டு, ராச்சாண்டார்மலை வீரர்கள் சிதறியோடினர். கோட்டைக்குள்ளிருந்து வீரர்கள் வருவதற்கு முன்பாக ரத வண்டியை வையம்பெருமான் செலுத்த, அதற் குப் பின்னால் பொன்னர், சங்கர், வீரமலை, சின்னமலைக் கொழுந்து மற்றும் ஆரிச்சம்பட்டி வீரர்கள் தொடர்ந்தனர். ரத வண்டி, காற்றிலும் கடுவேகமாகப் பறந்தது. அந்த அமளியில் மாந்தியப்பன் தானேறியிருந்த குதிரையில் தலை தெறிக்க ஓடி எப்படியோ தப்பித்துக் கொண்டான். 146