உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி . திட்டப்படி அந்தக் குழந்தைகளை வாங்கிக் கொண்டு செல்லத் தயாராகக் காத்திருந்த கருப்புப் போர்வைக்காரனான வள நாட்டு வீரனை ராக்கியண்ணன் கொன்றுவிட்டு, அந்தப் போர்வையால் அவர் தன்னை மறைத்துக் கொண்டு நின்றார். ஏற்பாடு செய்யப்பட்டப்படி காத்திருக்கும் வளநாட்டு வீரன் தான் என எண்ணி மருத்துவச்சிகள் ஏமாந்து விட்டனர். மருத்துவச்சிகள் இருவரும் பாதாள சிறைக்கு அனுப்பிவைக்கப் பட்ட பிறகு, ராக்கியண்ணன், குன்றுடையானிடமும் தாமரை நாச்சியாரிடமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடை பெறும்போது, 'எச்சரிக்கையாக இருங்கள்! எந்த நேரமும் இந்தக் குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடும்!" என்று அறி வித்து விட்டே சென்றார். . எய்தவனிருக்க அம்பைக் குறை கூறி என்ன பயன்? என்ற கேள்வி ஏக காலத்தில் குன்றுடையான், தாமரை இருவர் உள்ளத்திலும் எழுந்ததால் சில நாட்கள் கழித்து இருவருமே பாதாள அறைக்குச் சென்று அங்கே அடைபட்டிருக்கும் மருத் துவச்சிகளைச் சந்தித்தனர். நன்றாகச் சமைக்கப்பட்டு சுவையான உணவு அவர்களுக்கு அளிக்கப்பட்டாலும் கூட அந்த உணவு தங்கள் அகோரப் பசிக்குப் போதுமானதாக இல்லையென்று அவர்களிடம் மருத் துவச்சிகள் முறையிட்டனர். உடனே குன்றுடையான் சிறைக் காவலருக்கு ஆணையிட்டு, அந்த மருத்துவச்சிகள் போதும் போதும் என்கிற அளவுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய் தான். இவ்வளவு வெள்ளை உள்ளம் படைத்த ஒரு நல்லவ னின் குழந்தைகளைக் கொல்ல வந்தோமே என்ற குற்ற உணர் வால் அவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். 'இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்' எனும் குறளுக்கு இலக்கணமாகத் திகழும் குன்றுடையான் மீது அவர் களுக்கு ஒரு தனி மரியாதையே ஏற்பட்டது. இருவரும் குன்று டையான் தாமரைநாச்சியார் கால்களில் விழுந்து தங்களை மன்னித்து விடும்படி கெஞ்சிக் கதறினர். எல்லாமே செல்லாக் கவுண்டரின் சதியே என்பதையும் அந்த மருத்துவச்சிகள் விளக் கிக் கூறினர். குன்றுடையான் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, பாதாள சிறையிலிருந்து விடுதலை செய்தான். செல்லாத்தாக் கவுண்டரால் தங்களுக்கு ஆபத்து நேரும் என்று மருத்துவச் சிகள் பயந்து நடுங்கியதைக் கண்ட தாமரைநாச்சியார், அவர் களுக்குத் தேவையான அளவு பொன் கொடுத்து வேறு நாட் டுக்கு எங்காவது ஓடிப் போய்ப் பிழைத்துக் கொள்ளுமாறு அனுப்பி வைத்தாள். 175