உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் 'பராக்கிரமனிடம் என்ன வேலையை ஒப்படைப்பது?" "பராக்கிரமன், நேரடியாகப் போருக்குச் சென்று சாதிக்க முடியாத வேலை! புத்தி சாதுர்யத்தால் செய்து முடிக்கக்கூடிய வேலை!' ' "பொறுமையை சோதிக்காமல் சொல்லு மாந்தியப்பா!' என்ன மாயாஜால வித்தை செய்தாவது, பராக்கிரமன் வளநாட்டுக் கோட்டைக்குள் நுழைந்து அருக்காணி தங்கத்தை தூக்கிக் கொண்டு வந்து விட வேண்டும். அதில் பராக்கிரமன் வெற்றி பெற்றால் அருக்காணியுடன் அந்த மரகதக் கிளி ரகசி யமும் வந்துவிடும். அருக்காணித் தங்கம், தலையூர் மன்னன் மஞ்சத்துக்கு வந்த பிறகு தப்ப முடியுமா? கற்பிழந்த தங்கையை பொன்னரும் சங்கரும் காளி மன்னனுக்கே கட்டி வைக்க ஒப்புக் கொள்வார்கள். பிறகு தலையூரின் சம்பந்திகளாகி விடு வார்கள். சண்டை சச்சரவு இல்லை. தலையூரான் தலையும் தப்பும்!" " "வளநாட்டுக் கோட்டையிலிருந்து அருக்காணித் தங்கத்தை அபகரிப்பதா? அதர்மத்தின் உச்சிக்கே போகச் சொல்கிறாயே!' 4 "" "பொன்னர் சங்கர் என நினைத்து ஆசானின் இரண்டு குழந்தைகளை காளிதேவிக்குப் பலி கொடுத்தோமே; அதை விட அதர்மமான யோசனை ஒன்றையும் நான் சொல்லி விட வில்லையே! பகையை தந்திரமாக சமாளிக்கத்தானே வழி சொல்லுகிறேன்! நமது வீரப்பூர் காட்டுக்குள்ளேயிருக்கும் அந்த மரகத மாணிக்கக்கிளி நமது அரண்மனைக்குச் சொந்த மாக வேண்டாமா? அருக்காணியை தலையூரின் ராணியாக ஆக்குவதால் பொன்னர் சங்கர் அடங்கி ஒடுங்கி ஆமை போல் ஆகிவிட மாட்டார்களா? - - மாந்தியப்பன், எப்படியும் தலையூர்க்காளியை குன்றுடையான் குடும்பத்தின் மீது மோதவும் இழந்த வளநாட்டைத் தான் மீண்டும் பெறவும் காளி மன்னனை உசுப்பி விடுகிறான் என்பது தலையூரான் அறிவுக்கு எட்டவில்லை! - எனவே அவன் மாந்தியப்பன் கூறிய திட்டம் குறித்து, அந் தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் யோசிக்க ஆரம்பித்து விட்டான். 288 ரத வண்டி, தலையூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.