உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி ஞர்கள் பெற்றுள்ள வெற்றி போற்றத் தகுந்தது. எனவே அவர் களை வளநாட்டு ஆட்சிக் காவலர்களாக அங்கீகரிப்பதற்கு உறையூர் அரசு முடிவு செய்துள்ளது. அந்த முடிவினை நிறை வேற்ற; நிகழும் ஆவணி இருபது ஞாயிற்றுக் கிழமையன்று உறையூர் அரண்மனையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பொன்னர் - சங்கரை சிறப்பித்து, வளநாட்டின் நாட்டுக் காவல் ஆட்சி அங்கீகாரம் வழங்கும் அந்த விழாவுக் குத் தங்கள் வருகையும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நிமித் தமே இந்த அழைப்பு அனுப்பப்படுகிறது. ஓலையைப் படித்து முடித்த செல்லாத்தாக் கவுண்டர், காளி மன்னனின் முகத்தை நோக்கினார். தனது உயிர் குடிப்பதற் காகவே பிறந்துள்ள பொன்னர்-சங்கருக்கு பக்க பலமாகப் படையனுப்பியது மட்டுமல்ல; தனக்குத் துரோகம் செய்து விட் டுப் போன மாயவரின் வஞ்சக வலையில் வீழ்ந்து விட்டது மட்டுமல்ல; தனது படை வலிமையாலும் செல்வாக்கினாலும் கட்டிக் காக்கப்பட்ட வள நாட்டு ஆட்சியை அபகரித்த அந்தப் பொடியன்களை ஆட்சிக் காவலர்களாகவும் அங்கீகரிக்கப் போகிற செயலுக்கு விழா எடுத்து. அந்த விழாவுக்குத் தனக்கு அழைப்பும் அனுப்பி மிகவும் புண்படுத்தி விட்டதாகக் கருதிய காளி மன்னன் கையைத் தூணில் அறைந்து கர்ச்சனை செய்து உறுமினான். 'நானும் போகப் போவதில்லை. நம்மைச் சார்ந்த பதி னெட்டு நாட்டு வேட்டுவ குல ஆட்சிக் காவலர்களையும் உறையூர் விழாவுக்குப் போகாமல் தடுத்து விடுகிறேன்" என்று காளி மன்னன் ஆங்காரமாகக் கத்தியதைத் தனக்கு மிகவும் சாதகமாக எடுத்துக் கொண்டு செல்லாத்தாக் கவுண்டர் தனது வழக்கமான தூபம் போடும் பேச்சைத் தொடங்கினார். 44 ஆமாம்; அப்போதுதான் உறையூர் சோழனுக்கும் கொஞ் சம் உறைக்கும். மாயவரைப் பெரிதாக மதித்து பொன்னர் சங்கருக்குப் படையுதவி புரிந்ததால் அல்லவா தலையூரின் நட் பையும் அத்துடன் தலையூரைச் சார்ந்த பதினெட்டு நாட்டுத் தலைவர்களின் நட்பையும் இழக்க வேண்டியதாயிற்று என்ற மனக் கலக்கம் உறையூர்க்காரனுக்கு இப்போது ஏற்பட்டால் தான் இனி எதிர்காலத்திலாவது ஒழுங்காக இருப்பான். அது மட்டுமல்ல; ஏ, அப்பா! தலையூர்க்காளி எவ்வளவு தன்மான முள்ள வீரனாக விளங்குகிறான் என்று சோழநாட்டில் உள்ள குடி மக்கள் அனைவரும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதுக்குள்ளாகவாவது புகழ்ந்து பாராட்டுவார்கள்." . 291