உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் செல்லாத்தாக் கவுண்டர் தலையூர்க்காளியை இப்படி வான ளாவப் போற்றிப் பேசியே தனது செல்வாக்கை அந்த அரண் மனையில் உயர்த்திக் கொண்டிருப்பவர் என்பதை அறியா மலே அவர் மீது அபார நம்பிக்கையும் மதிப்பும் கொண்டுள்ள தலையூர்க்காளி. ஆமாம்!" என்பது போலத் தனது கொத்து மீசையைத் தடவிக் கொண்டு புன்னகை புரிந்தான். அத்துடன் விடவில்லை செல்லாத்தாக் கவுண்டர். 'நாம் விழாவுக்குப் போகாமல் இருந்தால் மட்டும் போதாது. அந்த விழாவில் முக்கிய கதாநாயகர்களாகக் கலந்து கொள்ளப் போகும் பொன்னர்- சங்கர் என்னும் பொடிப்பயல்களை உறையூரில் எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும். + 'உறையூர் விழாவில் அவர்களை அவமானப்படுத்துவதா? அது எப்படி முடியும்?" என்று தனது புரவலரான கவுண்ட ரைப் பார்த்துக் காளி மன்னன் கேட்டான். .. 'உறையூர்க் கோட்டையின் வாயில் காக்கும் வீரர்களுக்குத் தலைமை வீரனாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் நமது தளபதி பராக்கிரமனின் தம்பி விக்கிரமன் என்பதை மறந்து விட வேண்டாம். பொன்னர் - சங்கரை அவமானப்படுத்தி உறையூர்ச் சோழனுக்குப் பகைவர்களாக்க விக்கிரமன் மூலம் வழி காண வேண்டும். அந்த வேலையைப் பராக்கிரமன் இப் போதே செய்து முடிக்க வேண்டும். வேறொன்றுமில்லை; தம்பி விக்ரமனுக்கு அண்ணனிடமிருந்து ஒரு தகவல் போனாலே போதுமானது" என்று கூறிய செல்லாத்தாக் கவுண்டர், பராக் கிரமனைப் பரிவுடன் நோக்கி "என்ன தளபதியாரே! நான் சொல்வது சரிதானா?" எனக் கேட்டார். "உறையூரில் நமது ஆளாகத்தானே விக்ரமனையே விட்டு வைத்திருக்கிறேன். அதனால் கவலை வேண்டாம். இன்றைக்கே அவனுக்குச் செய்தி அனுப்பி விடுகிறேன்" என்று பராக் கிரமன்; அந்தப் பணியை முடித்து விட்டது போலவே பதில் கூறினான். அதுவரையில் வாய் திறவாமல் கவனித்துக் கொண்டிருந்த மாந்தியப்பன் "எல்லாமே நன்மைக்குத்தான் நடைபெறுகின் றன என்று துள்ளிக் குதித்து எழுந்தான். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் காளி மன்னன் ஆவலுடன் எதிர்பார்த்தான். 292