உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலைஞர் மு.கருணாநிதி 'அருக்காணித் தங்கத்தைத் தூக்கிக் கொண்டு வர வேண் டும்; அவளிடமிருக்கும் மரகதப் பச்சை மாணிக்கக் கிளி பற் றிய ரகசிய இடத்தை அறிய வேண்டும்; அவளையும் தலையூ ரின் ராணியாக்கி விட வேண்டும் என்று சொன்னேன் அல் அதற்கு வசதியாகத்தான் உறையூரில் பொன்னர் சங்கருக்கு விழா நடக்கிறது. லவா மாந்தியப்பா! நீ என்ன சொல்கிறாய்? அருக்காணியைக் கடத்தி வரும் திட்டத்துக்கும் உறையூரில் பொன்னர்-சங்கர் வரவேற்கப்படுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?' சந்தேகம் கண் பார்வையில் மிதந்திட காளி மன்னன் கேட்டான். - 'நிறையத் தொடர்பு இருக்கிறது. பொன்னரும் சங்கரும் உறையூர் போகும் நேரத்தில் வள நாட்டு அரண்மனையில் நமது திட்டத்தை மிகச் சுலபமாக நிறைவேற்றி விடலாம் அல் லவா? கடவுளாகப் பார்த்து அந்தப் பொடியன்களை உறையூ ருக்கு அனுப்பி வைக்கிறார். அந்தச் சமயத்தை நாம் நழுவ விடாமல் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும். இப்போது தலையூர் மன்னனுக்கு ஒரு புதிய தெம்புடன் கூடிய நம்பிக்கை பிறந்தது. ஆமாம்! மாந்தியப்பன் சொல்வதும் சரிதான். வள நாட் டில் பொன்னர் சங்கர் இல்லாத பொழுதுதான் எதிர்ப்பு அதிகமின்றி நமது திட்டம் வெற்றி பெறும். - காளி மன்னன் அந்த வெற்றியைக் குறித்து அழுத்தம்திருத்த மாகப் பேசினான். மாந்தியப்பன், தனது அற்புதமான மூளைத் திறத்தை தலையூர்க்காளி மன்னன் மேலும் பாராட்ட வேண்டு மென்று விரும்பினான். "என் மூளை மிக வேகமாக வேலை செய்கிறது. எனது தந்தையின் யோசனைப்படி உறையூரில் பொன்னர் - சங்கர் அவமானப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு உறையூர்ச் சோழன் அக்களதேவன் மீதுதான் கோபம் ஏற்படும். சிறுவர்களான படியால் சீறிக் கிளம்புவர். அதன் விளைவாக உறையூர்ச் சோழன் உறவு முறியும். அப்படி நடந்து விடுமானால் அந்தப் பொடியன்களுக்குப் படை உதவி செய்ய பிறகு எவன் முன் வரப் போகிறான்! பலவீனப்பட்டு நிற்கப் போகிற பொன்ன 293