உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் ரும் சங்கரும் வேறு வழியில்லாமல் தலையூருக்கு வருவார் கள். அருக்காணியைக் கடத்தி வந்ததைப் பற்றி எங்களுக்கு வருத்தமில்லை. அவளையே மணந்து கொண்டு எங்களுக்கு சம்பந்தியாகி விடுக என்று பேரம் பேசுவார்கள். சம்பந்தியாகி விட்டால் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை. காளியம்மன் செம்பகுலன் மீது ஆவேசமாக வந்து எச்சரித்த அந்தப் பகை வர்கள் பொன்னரும் சங்கரும் தலையூரின் அடிமைகளாகி விடுவார்கள்.'

  1. 6

- மாந்தியப்பனின் அபாரமான கற்பனையைக் கேட்டு அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்ட செல்லாத்தாக் கவுண் டர், "நீ என் மகன் என்பதை நிரூபித்து விட்டாயடா! பகை வர்களை அணைத்துக் கெடுக்க வேண்டும் என்ற ராஜ தந்திரத் துக்கு நீ கொடுத்திருக்கிற செயல் வடிவம் வெற்றி பெற்று விடுமேயானால் தலையூர்க்காளி மன்னனின் கொடியை உறை யூர்க் கோட்டையிலே கூட ஒரு காலத்தில் ஏற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது' எனக் கூறி மகிழ்ந்தார். தந்தையும் மகனும் தங்களின் சுய நலத்துக்காக பகைத்தீயை வளர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் நட்புறவும் வைத்துள்ள தலையூர்க்காளி அவர்களது நடிப்பில் மேலும் மயங்கினான். 66 'என்ன இருந்தாலும் எனக்காகத் தங்கள் குலத்தையே காட் டிக் கொடுக்கும் கோடரிக் காம்புகளாகத் திகழ்கிறார்களே! இவர்கள் செய்வது துரோகம் என்றாலும் அந்தத் துரோகம் எனக்காகவும் என் தலையூருக்காகவும் பயன்படும்பொழுது. 'துரோகம்" என்பதை மறந்து விட்டு இவர்களுக்கு என்றைக் குமே நன்றியுணர்வுடன் கடமைப்பட்டவனாக அல்லவா நான் இருக்க வேண்டியுள்ளது! காட்டிக் கொடுப்பவர்களை நம்பக் கூடாது என்றாலும் - இவர்களைப் பொருத்த மட்டும் என்னை என்றைக்குமே காட்டிக் கொடுக்க மாட்டார்கள் எனக்காக யாரையும் காட்டிக் கொடுப்பார்கள் என்பதால்தானே எனக்கு இவர்களிடம் இத்தனை பாசம்! - செல்லாத்தாக் கவுண்டரையும், மாந்தியப்பனையும் மனத்துக் குள் இவ்வாறு பாராட்டிக் கொண்டே, தலையூர்க் காளி 'பராக்கிரமா!" என்று கட்டளையிடும் தோரணையில் அழைத் .. தான். 294