உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் "எப்படியிருக்கிறாள் அருக்காணித் தங்கம்? என்று வடி வழகி, பராக்கிரமனின் பாறை போன்ற கன்னத்தில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்துக் கொண்டே கேட்டாள். பராக்கிரமனோ அந்த முத்தச் சுவையில் மயங்கி அவளை அப்படியே இடுப்பின் பக்கமும், மார்பகப் பக்கமும் கை கொடுத்துத் தூக்கித் தன் மடியில் கிடத்தியவாறு. அங்கிருந்த ஒரு பளிங்கு மேடையில் அமர்ந்தான். . 'அருக்காணி எப்படியிருக்கிறாள் என்றா கேட்கிறாய்? கடைந்தெடுத்த சிலை போல இருக்கிறாள். கசங்காத மலராக இருக்கிறாள். இனிமை - இளமை - புதுமை மூன்றும் நிறைந்த புதையலாக இருக்கிறாள். சுருக்கமாகச் சொன்னால்; நீ மாங் கனி! அவள் மாவடு! சிறு பிராயத்தில் மாவடுக்களை மரத்தி லேறிப் பறித்து சாப்பிட்டிருக்கிறேன். அதில் கொஞ்சம் உப் பும் கலந்து சாப்பிட்டால் அடடா; என்ன ருசி! என்ன ருசி! "நான் அருக்காணியின் கட்டழகைப் பற்றிக் கதையளக்கச் சொல்லவில்லை! கடத்திக் கொண்டு வந்திருக்கிறோமே; கலங் கிப் போயிருக்கிறாளா? கண்கள் வீங்க அழுது கொண்டிருக் கிறாளா?" என்றுதான் கேட்டேன் ஓ அதைக் கேட்கிறாயா? வேடனிடம் பிடிப்பட்ட மான் குட்டி போல திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறாள். சின்னஞ் சிறுசுதானே - உன்னைப் போலவா? எத்தனை பேர் தொட்டுத் தூக்கினாலும் இன்னும் பத்து பேர் தொட்டுத் தூக்க மாட்டார்களா என்று ஏங்குவாய் நீ! 4 அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இந்தப் பண்பெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் உங்களைப் போன்ற ஆண்களுக் குப் பெண்களால் ஈடுகொடுக்க முடியுமா?" .. பராக்கிரமன் வெறியோடு தனது உதடுகளை அவளது இதழ் களில் பதித்து -அவள், ஹா! வலிக்குது" என்று வீறிட்டுத் துடிக்கிற அளவுக்கு முத்தமொன்று கொடுத்தான். பின்னர், அவளை அணைத்தவாறு அழைத்துக் கொண்டு வா, வடி வழகி அருக்காணியைப் பார்க்கலாம்! அவளை நீயே மெது வாக வழிக்குக் கொண்டு வா! உன்னாலும் முடியாவிட்டால் அவளை ரதத்தில் கட்டிப் போட்டு - தலையூர் அரண்மனைக் குக் கொண்டு போக வேண்டியதுதான்!" என்று சற்று மிரட்டு கிற குரலில் கூறியவாறு குப்பாயி இருக்கும் அறைக்கதவைத் 362