உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி கிடைக்கும் மரியாதையும் கௌரவமும் - அதனைக் கொடுப்ப வரைக் காட்டிலும், ஏற்றுக் கொள்பவருக்குத்தான் மிகக் கேவ லம் என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். அவளை, மண்டபத்துக்குள்ளேயுள்ள வசதியும் ஆடம்பரமும் நிறைந்த அறையொன்றில் அடைத்துப் பூட்டி விட்டு - பராக் கிரமன், மண்டபத்து வாயிற்புறம் வந்து; வடிவழகியின் ரதம் வருகிறதா என்று எதிர்பார்த்துக் கொண்டு நின்றான். - மண்டபத்தைச் சுற்றியுள்ள வீரப்பூர் காட்டில் மரங்கள் காற்றில் அசையும் ஒலியும் - தொலைவில் கேட்கும் நரிகளின் ஊளையும் அந்த ஊளைச்சப்தம் கேட்டு, மரக்கிளைகளில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பல்வேறு வகைப் பறவைகள் சிறகடிக்கும் ஓசையும் காட்டின் இரவு நேர அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்தன. கண் வலியெடுக்க வடிவழகியின் ரதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த பராக்கிரமன் காதுகளில் குதிரைகள் வரும் குளம்படிச் சப்தம் கேட்டது. அந்தச் சப்தம் வெகு விரைவில் மண்டபத்தின் அருகே வந்து விட்டது. பாதுகாப்புக்காக சோழ நாட்டு வீரர்களைப் போல உடையணிந்து வந்த, தலையூர்க் குதிரை வீரர்கள் புடை சூழ புலிக்கொடி பறக்கும் வடிவழகி யின் ரதம் மண்டபத்து வாசலில் வந்து நின்றது! பராக்கிரமன் ஏகடியமாகச் சிரித்துக் கொண்டே, வடிவழகிக் குக் கை கொடுத்து ரதத்திலிருந்து அவளைக் கீழே இறக்கி விட்டு; "உறையூர் இளவரசியாரே! வருக! வருக!!"என்றான். . அவளும் தனது மார்பகம் பராக்கிரமனின் முதுகில் அழுந் திட அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ஆமாம் போங் கள்!' என்று கூறிக் கலகலவெனச் சிரித்தாள். அந்தக் காட் சியை; இருளை விரட்ட முயற்சிக்கும் மங்கலான தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த தலையூர் வீரர்கள், வேறு பக்கம் திரும் பிக் கொள்வது போலப் பாவனை செய்து கடைக்கண்ணால் கண்டு களித்துப் பெருமூச்சு விட்டனர். தாங்க முடியாதவர்கள் சிலர் குதிரை மேலிருந்த தங்கள் கால்களை அவற்றின் உட லின் இருபுறமும் அழுத்தினர். சிலர் உதட்டைக் கடித்துக் கொண்டனர். பராக்கிரமனும் வடிவழகியும் மண்டபத்துக்குள் ஒருவரை யொருவர் தழுவியவாறே நுழைந்தனர். 361