உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பொன்னர்-சங்கர்

  • #

- சங்கரும், அருக்காணியிடமிருந்த வாளைத் தன் கையிலே வாங்கிக் கொண்டு அருக்காணி ! நீ ஓங்கியவாள் என் கையிலே இருக்கட்டும்! நீ எந்த வாளை எடுத்தாயோ; அதே வாள் கொண்டு குப்பாயியை மீட்டு வருகிறேன் என்று வீரக் குரல் எழுப்பினான். அண்ணன்மார்களின் பேச்சை ஒரு வேளை அருக்காணி தங்கம்; அவள் தோழியின் மீது கொண்டுள்ள அன்பின் காரண மாக மறுத்து விடுவாளோ என்று அஞ்சிய முத்தாயி பவளாயி இருவரும் விரைந்து வந்து அருக்காணியைத் தழுவிக் கொண்டு கண்ணீர் பெருக்கினர்! - சங்கர்; பவளாயியைப் பார்த்து "உம் அருக்காணியைப் பத்திரமாகக் கவனித்துக் கொள்! என்று கூறிவிட்டு, தங்கை யிடமிருந்து பெற்ற வாளை நிமிர்த்திப் பிடித்தபடி அண்ணன் பொன்னரையும், மாயவரையும் வீரமலையையும் பார்த்து, விழி களாலேயே விடை பெற்றுக் கொண்டு இரை தேடும் வேங்கை, குகை விட்டுக் கிளம்புவது போல அந்த மண்டபத்திலிருந்து கிளம்பினான். அண்ணன் சங்கர் அடலேறு நடை போட்டுப் போவது கண்டு அருக்காணியின் நெஞ்சில் ஆறுதல் உணர்வு ஊற்றெடுத்தது எனினும்; அவளையுமறியாமல் 'குப்பாயி' எனக் குமுறிக் கதறி விட்டாள். $4 -UP - குப்பாயியைக் குதிரை மீதமர்த்தி, அவளை அப்புறம் இப் புறம் அசைய வொட்டாமல் அந்த இருளில் கடத்திச் சென்ற பராக்கிரமன் வடிவழகி வரும் ரதத்தை எதிர்பார்த்து வீரப் பூர் காட்டில் ரகசிய மண்டபம் ஒன்றில் காத்திருந்தான். ஏற் கனவே வடிவழகிக்கு அடையாளம் காட்டப்பட்ட பாதை! அடையாளம் காட்டப்பட்ட ரகசிய மண்டபம்! மண்டபத்தில் அடைக்கப்பட்ட குப்பாயி, தன்னை பராக்கிரமனிடம் அருக் காணி தங்கம் என்றே அடித்துச் சொன்னாள்! பராக்கிரமனுக் குப் பாதி சந்தேகம் - பாதி நம்பிக்கை! இருவரும் ஏறத்தாழ ஒரே வயது - கிட்டத்தட்ட ஒரே முகபாவம் இருவர் அணி வதும் ஒரே மாதிரி உடை - தாமரை நாச்சியாரின் படுக்கை யறையில் அவளுக்கருகே படுத்துறங்குவது என்றால்; அது அருக்காணியாகத்தானே இருக்க வேண்டும்! ஆகையால், தலை யூர் மன்னன் அனுபவிக்கப் போகும் அவளை, பராக்கிரமன் மிக்க மரியாதையுடன் நடத்தினான். அவள்தான் அந்த மரியா தையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு மனிதமிருகத்திடமிருந்து 360 -