உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் 'ஆமாம்! வேலப்பன் என்றுதான் சொன்னான்! ஏன்? அதில் ஏதாவது மர்மம் இருக்கிறதா? "மர்மங்கள் நிறைந்ததுதானே இந்த மாயா உலகம்! வேலப் பன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் உண்மை யிலேயே வேடன் அல்ல! அது ஒரு வேடம்! அந்த வேடந் தாங்கி யார் தெரியுமா? தலையூர்க்காளியம்மன் கோயில் பூசாரி செம்பகுலன் என்று கேள்விப்பட்டிருப்பாயே?" 41 என்ன செம்பகுலனா?' 'அவனேதான்! அவனை வைத்துத்தான் செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் குழந்தைப் பருவத்திலேயே உங்களிருவர் உயிரையும் போக்கிவிடுவதற்குத் தலையூர்க்காளி யிடம் சூழ்ச்சி செய்தனர்! இப்போதும் அவர்கள் அவனைத் தான் பயன்படுத்தி உங்களிடம் அனுப்பியுள்ளனர். அவன் தான் வேடனைப் போல வள நாட்டு அரண்மனைக்கு வந்திருக் கிறான். கிழவனின் சொல் கேட்டு சங்கர் அதிர்ச்சியுற்றான். "அப்படியா? இப்போதே போய் அவனுக்குரிய தண்ட னையை வழங்குகிறேன்" எனக் கூறிக் கொண்டே குதிரையில் பாய்ந்து ஏறிடப் போனான். "பொறு சங்கர், பொறு! நீ வந்த வேலையை மறந்துவிட் டாயே! மாயவரும் வீரமலையும் என்ன ஆனார்கள் -எங்கே யிருக்கிறார்கள் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டாமா? அதைத் தெரிந்து கொண்டு அதன்பிறகு செம்பகுலனிடம் போ!" "பெரியவரே! உடனே சொல்லுங்கள். மாயவரும். வீர மலையும் எங்கேயிருக்கிறார்கள்?" "சொல்லத்தானே போகிறேன்! சொல்வது மட்டுமல்ல, அவர்கள் இருக்குமிடத்தைக் காட்டவும் போகிறேன். அதற்குள் இன்னொரு சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள விரும்புகிறேன். வேடன் வேடத்தில் வந்திருக்கும் செம்பகுலன் மரகதப்பச்சை மாணிக்கக்கிளியுடன் வந்திருப்பானே?" 442