உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலைஞர் மு. கருணாநிதி 'ஆமாம் - அந்தக் கிளியைக் கூண்டுடன் கொண்டு வந் திருக்கிறான். அது மரகதமும் அல்ல -மாணிக்கமும் அல்ல! அது ஒரு போலிக் கிளி! பொன்னரையும் உன்னையும் பிரித்துவிட்டு தலையூர்க் காளியை வளநாட்டின் மீது படையெடுக்க வைப் பதற்காக அந்த செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் பின்னுகிற வலை பெரிதாகிக் கொண்டே போகிறது! அதில் நீங்களும் ஏமாந்து விட்டீர்கள்! பெரியவரே! அடுக்கடுக்காக அதிர்ச்சியூட்டும் செய்தி களையே தருகிறீர்களே, நான் இப்போதே வளநாடு சென்று என் அண்ணனிடம் எல்லா விபரங்களையும் சொல்லியாக வேண்டும்!" 64 ரு 'எல்லா விபரங்களும் என்றால், வீரமலை மாயவர் இரு வரையும் பற்றிய விபரங்களைத் தவிரவா? நீ உடனே வள நாட்டுக்குப் போக வேண்டியது முக்கியம் - அதற்குள் மாயவர் வீரமலையின் நிலையையும் அறிந்து கொள்ள வேண்டியது அதைவிட முக்கியம்! அவர்கள் என்ன ஆனார்கள்?' ஆள்மயக்கிப் பாறையில் இளைப்பாற எண்ணினார்கள். அந்தப் பாறையில் பெருகி வரும் நச்சுத் தண்ணீரை அளவுக்கு அதிகமாகவே அருந்திவிட்டார்கள். அதன் விளைவு-மாயவர், வீரமலை, அவர்களுடன் வந்த வளநாட்டு வீரர்கள் கடுமை யான மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்!" "இப்போது அவர்கள் எங்கேயிருக்கிறார்கள்? அவர்களை நான் பார்த்தாக வேண்டும்!" 'பாறையோரத்தில் அவர்கள் மயங்கிக் கிடந்ததை நானும் எனது கிராமத்தினர் சிலரும் பார்த்துப் பதைத்துப் போனோம்! மயக்கநிலையில் பாறையருகே கிடந்தால் ஒருவேளை இரவு நேரத்தில் மிருகங்களினால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற் படக் கூடுமென அஞ்சி, அவர்கள் அனைவரையும் பக்கத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான மண்டபத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துள்ளோம்! அவர்களுக்குத் தேவையான மூலிகைகள் சிலவற்றைப் பறிப்பதற்கே இந்நேரத்தில் நான் இங்கு வந்தேன்" என்று கூறிய கிழவன், தன் மடியிலிருந்து சில பச்சிலைகளை எடுத்துக் காட்டினான். 443