உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் நான் இப்போதே அவர்களைப் பார்த்தாக வேண்டும்" என்று சங்கர் துடித்தான். - "என் தீப்பந்த வெளிச்சத்தை தொடர்ந்து வந்துகொண்டே யிரு, அந்த மண்டபத்தில் அவர்களைப் பார்க்கலாம் ஒரு வேளை உன் அதிர்ஷ்டம், அவர்கள் இந்நேரம் மயக்கம் தெளிந்து கண் விழித்திருக்கவும் கூடும்!' கிழவன், தீப்பந்த ஒளியில் அந்தக் காட்டுப் பாதையில் செடி கொடிகள் புதர்களை விலக்கி விட்டுக்கொண்டு முன்னே நடந் திட -தொடர்ந்து குதிரையை கையில் பிடித்தவாறு, சங்கரும் நடந்தான். கிழவன் குறிப்பிட்ட அந்த மண்டபத்தை அடைந்தனர்! ஏற் கனவே பராக்கிரமனால் குப்பாயி அடைத்து வைக்கப்பட்ட அதே மண்டபந்தான்! ஆனால் சங்கருக்கு அது தெரியாது! குதிரையை வாசலில் நிறுத்திவிட்டு சங்கர், சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கிழவனைத் தொடர்ந்து மண்டபத்திற்குள் நுழைந்தான். மண்டபத்தைச் சுற்றியிருந்த தழை மண்டிய புதர் களில் யாரோ சிலர் மறைந்துகொள்ள யத்தனிக்கும் ஓசை மட்டும் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தது. சங்கர் உள்ளத்தில் ஏதோ ஓர் உணர்வு தோன்றவே ஓங்கிய வாளுடன் எச்சரிக்கை யாகவே மண்டபத்திற்குள் போனான். இருண்டு கிடந்த அந்த இடத்துக்குள் தீப்பந்த வெளிச்சம் வரவே, சில மூலை முடுக் குளில் இருந்த வௌவால்கள் படபடவென இறக்கையை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் பறந்தன. பெரியவரே! எங்கே இருக்கிறார்கள் மாயவரும் வீரமலை யும்? இந்த இருட்டு மண்டபத்தில் அவர்களால் மூச்சுக்கூட விட முடியாதே! இதைக் கேட்டு, சங்கர் வாய் மூடுவதற்குள் அந்தக் கிழவன் பயங்கரமாக சிரிக்கத் தொடங்கினான். அதற்குள் மண்டபத் தின் வாசற்கதவு வெளிப்புறமிருந்து மூடப்பட்டது. சங்கர். ஏதோ ஒரு சதியில் சிக்கிவிட்டதாக முடிவு செய்து கொண்டு ஓங்கிய வாளுடன் வாசற்பக்கம் பாய்ந்தோடி அந்தக் கதவைக் காலால் உதைப்பதற்குள். ஒரு இரும்புச் சங்கிலி அவன் உடலை அழுத்திப் பின்னுக்குத் தள்ளியது. அந்தச் சங்கிலிப் பிணைப்பை அறுத்தெறிந்திட வாளைக் கீழே வீசிவிட்டு இரு கரங்களையும் சங்கர் பயன்படுத்திட முனைந்தபோது மற் 444