உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறக்க முடியுமா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வேண்டுமென்று பிடிவாதம் காட்டியதால் பெண் வீட்டார் அதற்குச் சம்மதிக்காமல் அந்தப் பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். இந்த விஷயத்தைப் பின்னணியாக வைத்து மாறன் ஒரு சிறு கதை எழுதி எனக்குத் தபாலில் அனுப்பியிருந்தார். க கடுமையான கட்சிக் கொள்கையா ? காதலின் சக்தியா? இந்தப் போராட்டத்தில் காதல் கிளி பறந்து போய் விட்டது தான் மிச்சம்" என்ற கருத்துப்பட அவர் எழுதிய அந்தச் சிறுகதைக்கு அவர் வைத்திருந்த தலைப்பு; கூண்டை விட்டுக் கிளி பறந்தது!" என்பதாகும். அன்று அந்த இளமைப் பருவத்தில் அவர் எனக்காக எழுதி அனுப்பிய சிறுகதைக்குச் சூட்டிய தலைப்பைப் போலவே என் தோளில் தொத்தி வளர்ந்த மாறன் எனும் அந்தக் கிளி பறந்து போய் விட்டது. ஆனால் அந்தக் கிளியின் பேச்சு என் இதயக் கூண்டில் எதிரொலித்துக் கொண்டு தானிருக்கிறது. மறுபிறவியில் எனக்கு நம்பிக்கையில்லை; ஆனால் மாறனும் நானும் மறுபிறவி எடுத்த பயங்கரமான நிகழ்ச்சிகளை சந்தித்தது உண்டு. - - மாறனைப் பற்றிய "மறக்க முடியுமா” எனும் இந்தத் தொடரில் அவரது அரசியல் எழுச்சி பற்றியோ “ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?" என்ற புத்தகத்தின் வாயிலாக அவர் எடுத்து வைத்த வாதங்களின் வலிமை பற்றியோ "மாநில சுயாட்சி” கோரிக்கையை ஒரு வேத புத்தகம் போலவே தயாரித்துக் கொடுத்த அவரது அறிவாற்றல் பற்றியோ மத்தியில் அமைச்சராகி மாப்புகழ் கொண்டது பற்றியோ - -