உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறக்க முடியுமா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். இந்த நேரத்தில் இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி என்னைப் பிடித்து தள்ளி விட்டார். அந்த ஆளை (கலைஞரை) வண்டிக்கு தூக்கி வாருங்கள் என் கத்தினார். று என்னைத் தள்ளி விட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிகாரி என் கையைப் பிடித்து இழுத்து என்னை அடிக்கு மேல் அடித்து ஹாலின் ஓரத்துக்கு தள்ளிவிட்டார். இந்த சூழ்நிலையில் கலைஞரை மிருகத்தனமாக தாக்கியதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அவர் வலி தாங்காமல் அலறினார். அதையும் பொருட்படுத்தாமல் அவரை ஒரு மூட்டையை தூக்குவது போல் தூக்கிச் சென்றனர். அவரை தூக்கிச் சென்றவுடன் வெளிப்புறமாக நின்று கதவைப் பூட்டிவிட்டார்கள். பின்னர் நான் சி.பி., சி.ஐ.டி. அலுவலகத்துக்கு விரைந்தேன். அங்கு கலைஞர் உதவி கேட்டு அலறியதால் நான் போர்ட்டிகோவுக்கு ஓடி வந்தேன். கலைஞருடன் துணைக்கு நானும் காருக்குள் ஏறிக் கொண்டேன். உடனே போலீசார் காரை சுற்றி வளைத்துக் கொண்டனர். எந்த முன் எச்சரிக்கையும் செய்யாமல் கார் கதவை திறந்து என் கையைப் பிடித்து வெளியே இழுத்தார்கள். உடனே ஒரு போலீஸ் அதிகாரி உங்களையும் கைது செய்கிறோம் என்று கத்தினார். என்னைப் பார்த்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்கள். காரை விட்டு வெளியே வராவிட்டால் எனக்கு சரியான பாடம் கற்பிக்க போவதாக பயமுறுத்தினா னார்கள்.