34 ஆ...என் போர்வாள் காணாமற் போனது. எப்படி இங்கே வந்தது...? பத்மா: மனோகரா ! நீ என்னைப் பிரிந்துவிட்டதாக இந்தப் பாவி சொன்னான்... ராஜப்பியன் : திருட்டுப் பயல் !... வாளைத்திருடியதுமல்லா மல்... வாலை வேறு நீட்டுகிறானோ, தாடியைப் பார், தாடியை! [தாடியைப் பிடிக்க தாடி கையுடன் வருகிறது] மனோகரன்: பௌத்தாயனன்... - ராஜ: சதியிலே புது அத்யாயம் - போர்வாளை திருடி வந்து காட்டினால்... மகாராணி இறந்துவிடுவார்கள். சரியான சூழ்ச்சி... மனோகரன்: தேளின் கொடுக்கே!... யாருடைய திட்ட மடா இது!...சொல்... பத்மா: மனோகரா, பாவம்...அவனை விட்டுவிடு. மனோகரன்: விடக் கூடாதம்மா...ராஜப்ரியா... இவனை சிறையிலே பூட்டி வை! பௌத்: எல்லாவற்றுக்கும் வசந்தசேனைதான் காரணம்! மனோகரன்: வசந்தசேனை! இனியும் அவளை உயிரோடு விடக்கூடாது! (போகிறான்) பத்மா: மனோகரா! நில் -எங்கே ஓடுகிறாய்?... மனோகரன்: அம்மா இன்னும் என்ன சபதத்தை நிறைவேற்றி விட்டபிறகு! - உங்கள் பத்மா: சொல்லுகிறேன், முதலில் வாளை உறையில் போடு !... மகாராஜாவுக்கோ வசந்தசேனைக்கோ - என் அனுமதியின்றி, எந்தவிதமான தீங்கும் செய்வ தில்லையென்று ஆணையிடு !... என்மேல் ஆணையிடு. மனோ: அம்மா! பத்மா: தாயின்மேல் ஆணையிடு! மனோ : அரசரை ஒன்றும் செய்வதில்லையம்மா, பத்மா: கூடாது ! வசந்தசேனைக்கும் சேர்த்துத்தான் !
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/35
Appearance