உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 29 “பறிக்காத செந்தாமரைப் புஷ்பம்போல் இருந்த உன் முகத்திலே-எப்படித்தான் இவ்வளவு களங்கக் கீறல் கள் விழுந்ததோ தெரியவில்லை... பால் நிலவு உன் முகம் என்று பாராட்டித் திரிவேனே; அந்த நிலவு இப்படியா தேய்ந்து விடுவது?" "என்ன? என்ன பேசுகிறீர்கள் ?" ? ஆனந்தி ! இதை இத்தனை நாள் என்னிடம் ஏன் ஒளித்துவைத்தாய்? மறுநாளே சொல்லியிருந்தால், அந்த மடையனின் கழுத்தை அறுத்து பிணத்தை மிதக்க விட் டிருப்பேனே. பேயன் ! பித்தன்!! பெண் இனத்தின் பெருமை உணராத அற்பன் !!!” "நீங்கள் சொல்வது ......?" -WO "பாலகங்காதரத் தேவனைப் பற்றிப் பேசுகிறேன் பாவையுந்தன் கற்பைப் பாழ்படுத்திய பாவியைப்பற்றிப் பேசுகிறேன்! இந்த வார்த்தைகள் காதிலே பட்டதும் ஆனந்தி மூர்ச்சையுற்றுக் கீழே சாய்ந்தாள். கற்பு பறிபோனதை விட - பறிபோன விஷயம் வெளியே தெரியும்போதுதான் அவமானத்தைத் தாங்கமுடியாமல் அல்லாடுகிறார்கள் சில பெண்கள் என்பதற்கு ஆனந்தி உதாரணமாகிவிட்டாள் ! அலறினாள் ; பிரக்ஞை வந்த பிறகு! அழுது புலம்பினாள்! நேரத்தைச் சாதுர்யமாகப் பயன்படுத்திக் - டைகர் - கொண்டான். கவலைப்படாதே! இந்த சேதி இனி என்னைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. பெண்ணொருத்தி தனியாக இருந்ததால் அல்லவா அந்தத் தேவனின் திமிராட்டத் திற்கு இடங்கொடுத்துவிட்டது! இனி நான் தான் உனக் கும் உன் கற்புக்கும் காவல்!" எனக் கண்ணீர் விட்டபடி- தேம்பித் தேம்பி அழுதபடி- ஆனந்தியின் கரங்களை எடுத் துத் தன் கன்னங்களிலே பொத்திக்கொண்டான். ஆனந் தியை இப்போது தாட்சண்யம் வந்து அடிமையாக்கிக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/30&oldid=1708056" இலிருந்து மீள்விக்கப்பட்டது