உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வெள்ளிக்கிழமை நான் ளு யில் சொல்லாதே என்று கேட்டுக்கொண்டார்கள். இப்போது உன் காலிலே விழுந்து கேட்டுக்கொள்ளு கிறேன் ; காதை சுத்தமாகக் கழுவிவிடு!" டைகர் ஜெயித்துவிட்டான். டாக்டர் ஆனந்தியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ரகசியமொன்றையே அறிந்துகொண்டுவிட்டான். அந்த ரகசியத்தின் அடிப் படையிலேயே தன் ஆசைக் கோட்டையை எழுப்பிவிடத் தீர்மானித்துப் புறப்பட்டான். லும் . என்றும்போல் அன்றும் டைகரை ஆனந்தி வரவேற் றாள். எவ்வளவுதான் ஊரிலே ஊதாரியாகத் திரிந்தா தன்னைப் பொறுத்தவரையில்-தன் அண்ணனின் பால்ய சிநேகிதன் என்ற உணர்ச்சியோடு -- இவ்வளவு உதவிகள் செய்கிறானே என்ற எண்ணம் அவளுக்கு! தெரியும்; வெள்ளாடுகளை -- புள்ளிமான்களைக் கண்ட மாத்திரத்தில் பாய்ந்து விழுந்து பசியாற்றிக்கொள் ளும் வேங்கை - வெறியை அடக்கிக்கொண்டு, பசுவைப் பதம் பார்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிற சங்கதி? என்ன அதனால், அவள் அவனை நம்பினாள். அவனிடத்திலே ஒரு பாசமும் வைத்தாள். அந்தப் பாசத்திற்கு எத்தகைய உறவு வர்ணமும் பூசவில்லையே தவிர களங்கமற்ற பாசந் தான் அது! மாகக் என்றைக்குமில்லாத மாதிரியில் அன்று டைகர் சோக காணப்பட்டதை ஆனந்தி வியப்போடு நோக்கி, ஏன் வாட்டம் ?" என்று கேட்டாள். டைகரின் குரல் நடுங்கியது. விம்மி விம்மி அழுதான். "ஏன்,எதற்காக இப்படி ?... யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டதா?" என்று துடித்துக் கேட்டாள் ஆனந்தி! ! .. யாருக்கும் எதுவும் ஆகவில்லை! ஆனந்தி, உன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பயமாயிருக்கிறது........ அய்யோ உன் எதிரில் என்னால் நிற்கவே முடியவில்லை!" என்ன சொல்கிறீர்கள் ? என் முகம் பயங்கரமாக இருக்கிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/29&oldid=1708055" இலிருந்து மீள்விக்கப்பட்டது