உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வெள்ளிக்கிழமை தால்... நயினாவின் இருதயம் படபடத்தது! அந்த ஓலி ஒருவேளை அவள் காதில் விழுந்து விழித்துக்கொள் வாளோ என்ற பயத்தில் தன் மார்பை அமுக்கிக்கொண் டான். அவள் முகத்தைவிட்டு அவன் விழிகளை எடுக்க மனம் வரவில்லை. அப்படியே அசைவற்று மயக்கமுற்ற நிலையிலே நின்றுகொண்டிருந்தான். அந்த மயக்கத்தில், பலகணியின் பக்கம் ஒரு கரிய உருவம் நின்றுகொண்டிருப் பதை அவன் கவனிக்கவேயில்லை. அந்த உருவத்தின் கையிலே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. பலகணித் திரை யிலே அந்த உருவமும், அது பிடித்திருந்த துப்பாக்கியும் நிழல் வடிவத்திலே விழுந்தன. ஆனந்தியின் நித்திரை அழகில் நேத்திரத்தைப் பதித்திருந்த நயினாவுக்குப் பலகணிப் பக்கம் கண் திருப்ப நினைவேது ? உருவம் கைத் துப்பாக்கியைச் சரிபார்த்துக் கொண்டதானது பலகணி நிழலிலே நன்றாகத் தெரிந்தது. 12 உடைகள் யாரோ வரும் காலடி ஓசை கேட்கவே நயினா முகம்மது அவசர அவசரமாக ஆனந்தியின் படுக்கையைவிட்டு அகன்று, பழையபடி தாழ்வாரப் பக்கம் வந்துவிட்டான். அவன் உடலெங்கும் வியர்த்துக்கொட்டி எல்லாம் நனைந்துவிட்டன. ஒரு பெண்ணைப்பற்றி, தானே ஒரு முடிவு செய்துகொண்டு, அந்த முடிவுக்கு அவள் ஒத்து வருவாளா என்று எதிர்பார்ப்பதும், அதற்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபடுவதும் - ஆண்மைமிக்க ஆட வர்களைக்கூட எவ்வளவு கோழைகளாக்கிவிடுகிறது என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். தாழ்வாரத்திலிருந்த படியே, ஆனந்தியிருக்கும் அறைப்பக்கம் வருவது யார் என்று கவனித்தான். வாயிலின் மற்றொரு ஈ கதவைத் திறந்துகொண்டு நர்ஸ் ஒருத்தி, கையிலே மருந்து சீசா வுடன் உள்ளே நுழைந்தாள். வந்தவள், ஆனந்தி நன்றாகத் தூங்குவதைப் பார்த்து, ஈனசுரத்தில் இரண்டு முறை கூப்பிட்டுப் பார்த்தாள். ஆனந்தி விழிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/99&oldid=1708125" இலிருந்து மீள்விக்கப்பட்டது