உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. கலைஞர். மு. கருணாநிதி 65 டிருக்கின்றது; அதை மேலும் திருத்த வேண்டுமென்றால், செப்பனிட வேண்டுமென்றால், மக்களால் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப்படுகின்ற தேர்தல் ஒன்றை அறிமுகப்படுத்தினால் போதுமென்று எண்ணி அண்ணா அவர்கள் ஊராட்சி மன்றங் களுக்கு நேரடித் தேர்தலைக் கொண்டு வந்தார். பிறகு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஒன்றியங்களுக்கும், நகர் மன்றங் களுக்கும் நேரடித் தேர்தலைக் கொண்டு வந்தார். அதோடு நிறுத்தியிருந்தால் இன்றைக்கு குழப்பங்களே வந்திருக்காது. அவருக்கு அதிகாரம் இல்லை. இவருக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் இன்றைக்குச் சொல்கிறோம். ய குரு - ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்காதே என்று ஒரு சட்டமன்ற உறுப்பினரே எங்களுக்கு கடிதம் எழுதி யிருக்கிறார். அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இந்த அதிகாரத்தை - கல் எடுக்கின்ற குவாரி தோண்டுகின்ற அதனால் வருகின்ற வருமானத்தைப் பெறுகின்ற அதிகாரத்தை ஊராட்சி மன்றங்களுக்குத் தரக்கூடாது என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் எழுதிய கடிதமே என்னிடத்திலே இருக்கிறது. என்ன காரணம்? அதிகாரங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்ற எண்ணம் பலருக்கு சுலபத்திலே வருவ தில்லை. அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கும்போது, அது மிகப் பரவலாக பகிர்ந்து அளிக்கப்படவேண்டும். மாவட்ட ஊராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்து கொடுத்தால் 29 இடங்களோடு அந்த பகிர்ந்தளிப்பு முடிந்து விடும். ஊராட்சி மன்றங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களுக்கு அது பகிர்ந்தளிக்கப்படும். எனவேதான் இந்த அரசு ஊராட்சி மன்றங்களுக்கு பல அதிகாரங்களை இன்றைக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கின்றது. ஆனால் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலே உள்ள சொத்தை. சோடைகள், ஓட்டை, உடைசல்கள் - இவைகளின் காரணமாக, -