உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வழி மேல் விழி வைத்து... மன்றங்கள் செயல்படாமல் இருந்து இன்றைக்கு ஆறு மாநகராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டிலே செயல்படுகிறதென்றால் அது தேர்தல் நேரத்திலே நாங்கள் அளித்த வாக்குறுதியைச் செயல்படுத்தியது தான். 'சொன்னதைச் செய்வோம்' 'செய்வதைச் சொல்வோம்' என்ற அந்த வாக்குறுதியை நிறைவேற்றிய காரணத்தால்தான் இன்றைக்கு மாநகராட்சி மன்றம் சென்னையில் சுதந்திரப் பொன்விழா நாளைக் கொண்டாடுகின்ற இந்தக்காட்சியை நாமெல்லாம் காண்கிறோம். உ ஆனால், நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் சென்னையைப் பொறுத்த வரையிலே 25 ஆண்டு காலமாக மாநகராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவில்லை. அப்படி நடைபெறாமல் இருந்த மதுரை மாநகராட்சி, கோவை மாநகராட்சி, மற்ற மாநகராட்சி மன்றங்களுக்கும் பல்வேறு ஊராட்சி மன்றங்களுக்கும், ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடை பெற்று பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய பஞ்சாயத்து சட்டம், பஞ்சாயத்து திட்டத்திற்கு மாறாக ஒரு குழப்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதிலே பஞ்சாயத்தும், பஞ்சாயத்து யூனியனும், மாவட்டப் பஞ்சாயத்தும் ஒன்றோடொன்று இணையாமல் தனித்தனியாக திரிசங்கு சொர்க்கம் போல தொங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தபோதே. அதை எதிர்த்த பெருமை எங்களுடைய இயக்கத்திற்கு உண்டு எனக்கு உண்டு. எதிர்த்ததற்குக் காரணம் இன்றைக்குச் சொல்கிறோமே, காமராஜர் வழி என்று - அந்தக் காமராஜர் வழியிலேதான் அன்றைக்கு எதிர்த்தோம். அவர் வழி நின்று தான் எதிர்த்தோம். ராஜீவ்காந்தி கொண்டு வந்த அந்தத் திட்டத்தை நாங்கள் காமராஜர் வழி நின்று எதிர்த்தோம். . என்ன சொல்லி எதிர்த்தோம்? காமராஜர் இந்தச் சமுதாய நலத் திட்டத்தில் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம் என்ற இந்த இரண்டு தட்டுக்களோடு நிறுத்தி விட்டார். ஜில்லா போர்டுகள் தேவையில்லை என்று ஒழித்து விட்டார். அவர் கொண்டு வந்த திட்டம்தான் தமிழகத்திலே வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்