உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 63 ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தால் அந்தத் திட்டத்திலே தொய்வு ஏற்பட்டு, மீண்டும் 89 - 90இல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டம் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு இப்போது மீண்டும் அந்தத் திட்டம் அகில இந்தியாவிலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டு - மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு 'இந்திரா காந்தி நினைவு வீடு கட்டும் திட்டம்' என்று பெயர் வைத்திருப்பதாக கோ.சி.மணி இங்கே சொன்னார். 101 ல நான் அந்தத் திட்டத்தின் பெயரைப் பற்றிக் கவலைப்பட வில்லை. திட்டம், திட்டமாக இருந்தால் போதும் என்பதுதான். அந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருதொகை தருகிறது. மாநில அரசு ஒரு தொகை ஈடு செய்கிறது. அதுவும் போதாமல், அந்தத் தொகுப்பு வீடுகளுக்கெல்லாம் ஆதிதிராவிட மக்களுக்கு சாதாரண வீடுகளாக இருக்கக் கூடாது; காங்க்ரீட் தளம் வேண்டுமென் பதற்காக ஏறத்தாழ 11,000 ரூபாயை அந்த வீடுகளுக்காக தமிழக அரசு செலவழிக்கின்றது மாநில அரசு செலவழித்தாலும், மத்திய அரசு செலவழித் தாலும் இரண்டும் மக்கள் பணம்தான். அதை நானும் மறந்துவிடக் கூடாது. மத்தியிலே இருப்பவர்களும் மறந்துவிடக் கூடாது. மத்தி யிலிருந்து பணம் கொடுக்கிறோம் என்று சொல்வார்களானால், மாநிலங்களிலேயிருந்து வசூலிக்கப்படுகின்ற வரிதான் மத்தியிலே குவிந்து, அங்கிருந்து இங்கே வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதைப்போல மாநில அரசாகிய நாங்கள் செய்கிறோம் என்று சொல்கிற நேரத்தில், மக்களிடமிருந்து வசூலிக்கப் படுகின்ற வரிதான் எங்களிடமிருந்தும் உங்களுக்கு மீண்டும் பலன்களாக கிடைக்கின்றது என்பதை நானும் மறந்து விடக்கூடாது. நீங்களும் மறந்து விடக் கூடாது. இன்றைக்கு மாநகராட்சி மன்றத் தேர்தல் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றிருக்கின்றது. அதற்கே கூட ஒரு வெள்ளி விழா கொண்டாடலாம் 25 ஆண்டுகள் மாநகராட்சி