உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 103 உங்களுக்குப் புரியும் (பலத்த சிரிப்பு). மாறுதல் செய்தால், மறுபடியும் மீண்டும் பழைய இடத்திற்கே மாறுதல் கேட்பார்கள் மாறுதல் கேட்க வருகிற நேரத்தில் எங்களுக்கு என்ன ஆறுதல் என்று கேட்பவர்களும் உண்டு. அதற்காகவே மாறுதல்கள் நடைபெற்ற காலம் அது. ஆனால் இப்படி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்களை எல்லோரும் அவரவர்களும் தங்களுடைய சொந்த ஊருக்கு மாறுதலிலே செல்லும் வண்ணம் கடந்த ஆண்டு பிப்ரவரி திங்களிலே சிறப்பு ஆணை ஒன்று வெளியிட்டதும் இந்த அரசுதான் என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். (கைதட்டல்) - அதைப்போல உயர் கல்விக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து கற்க வேண்டும், அப்போதுதான் அவர்களிடம் கற்கும் மாணவர்கள் சிறந்த அறிவுள்ளவராக திகழ முடியும் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் எந்தக் காலத்திலும் மாணவர்கள்தான் - அவர்கள் ஆசிரியர்களாக ஆனாலும் கூட அவர்கள் மாணவர்கள்தான். ள மாணவ ஒவ்வொரு நாளும் காலையிலே பள்ளிக்குச் சென்று பாடம் நடத்துவதாக இருந்தால் முதல் நாள் இரவே அவர் பாடம் படித்துக் கொண்டு சென்றால் தான் அந்த மாணவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்க முடியும். து முதல்நாள் இரவு பாடம் படிப்பவர்களுக்காகச் சொல்கி றேன். யாராவது படிக்காமல் இருந்தால், இனிமேல் படிப்பீர்கள் என்ற அந்த நம்பிக்கையோடு சொல்கிறேன்; அந்த வேண்டு கோளோடு சொல்கிறேன். மறுநாள் காலையிலே பள்ளியிலே சென்று பாடம் நடத்துவதாக இருந்தால், முதல் நாள் இரவு படித்தாக வேண்டும் என்ன பாடம் நாளைக்குப் போதிக்கப் போகிறோம்? என்ன பாடம் கற்றுத் தரப் போகிறோம் என்பதை முதல்நாள் படித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். நான் முதலமைச்சர் தான். நீங்கள் ஆசிரியர்கள். நம்முடைய. கல்வி அமைச்சர், மற்றவர்கள் எல்லாம் இங்கே பேசுகிறோம் என்றால் - ஆசிரியர்கள்