உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வழி மேல் விழி வைத்து... வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் எல்லாம். பணியிலே அமர்த்தப்பட்டுள்ளார்கள். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 686 ஆசிரியர் கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த ஆண்டு 821 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட, பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அதே போல பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் கடந்த ஆண்டில் 629 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். இந்த ஆண்டில் 600 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படு கிறார்கள். 10% அதைப் போலவே தலைமை ஆசிரியர் பணிகள் - இந்தப் புதிய ஆசிரியர் நியமனங்கள் மாத்திரமல்லாமல் முந்தைய ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமலே இருந்தன. ஆனால், பல உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் - இதன் காரணமாக நிர்வாகச் சீர்கேடு களுக்கு உள்ளாகி விடுவதைக் கண்ட இந்த அரசு - நம்முடைய கல்வித் துறை வாயிலாக செய்த பெரும் கடமையாக - உயர்நிலைப் பள்ளிகளிலே 192 தலைமை ஆசிரியர்களையும், மேல்நிலைப் பள்ளிகளிலே 428 தலைமை ஆசிரியர்களையும் நியமனம் செய்து ஆணையிட்டது. இந்த நடப்பு ஆண்டிலும் கூட 231 உயர்நிலைப் பள்ளிகளுக்கும், 225 மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள் என்பதை நான் மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொன்று ; கடந்த ஆட்சியில் ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கிய விதத்தில் - அப்பொழுது நியமிக்கப்பட்டவர்களே 8,450 பேர்தான். அதிலே குறிப்பாக பெரும்பான்மையான பெண்கள் தொலைதூரங்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கெல் லாம் பணி அமர்த்தப்பட்டார்கள். மாறுதல் செய்வது எதற்காக என்பது உங்களுக்குத் தெரியும் சிரிப்பு). அதனுடைய மர்மமும்