உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1948 - அக்டோபர் 23, 24-ஆகிய நாட்களில் இந்தியை எதிர்த்துத் திராவிடர் கழகத் தனி மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் தலைமை வகித்தார்கள். பெரியார், அண்ணா ஒரே மேடையில் அண்ணா மாநாட்டுக்குத் தலைவராக! அய்யா, மாநாடு நடத்துபவராக! அப்போதுதான் பெரியார் சொன்னார்: “பெட்டிச் சாவியை அண்ணா கையில் கொடுத்து விட்டேன்" என்று. ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கூடிய அந்த ஈரோடு மாநாட்டில் பெரியாரும் அண்ணாவும் ஆற்றிய பேருரைகள் மட்டு மின்றி, திரு. வி. க. ஆற்றிய உரையும் என்றென்றும் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. “நான் பழைய காங்கிரஸ்வாதி. பெரியாரும் காங்கிர சில் இருந்தவர்தான். நாங்கள் இருவரும் அரும் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ்தான் இன்று சிலரது சுயநலக் கோட்டை யாகக் காட்சி தருகிறது. காங்கிரசில் உண்மை உழைப்பாளிக்கு இடமில்லை. அது கள்வர் குகைக்குச் சமம். தூயவர் காந்தியார் கண்ட காங்கிரசையோ, நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றிய காங் கிரசையோ நான் அழிக்க முனையவில்லை. பாசிசப் பாதையில் வேக மாகச் சென்றுகொண்டிருக்கும் காங்கிரசையே நான் அழிக்க விரும்புகிறேன். இதுபோலக் கர்ச்சனை செய்தார் தமிழ்ப் பெரியார் திரு. வி. கல்யாணசுந்தரனார் அம்மாநாட்டில்! காஞ்சீபுரத்தில் திரு. வி.க. தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். பெரியார் ஈரோட்டில் நடத்திய மாநாட்டில் திரு. வி.க. காங்கிரசைப் பற்றி இப்படிக் கருத்தறிவித்தார். ஈரோட்டு மாநாட்டில் நெஞ்சுருக்கும் பேச்சொன்றும் கேட்டேன். அதுதான் அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியின் இறுதிப் பேச்சு: "தோழர்களே! இந்த மாநாட்டுக்குப் பிறகு சிறை செல்ல நேரிடும். எனவே, அவ்வகையில் இது கடைசி மாநாடு என்றெல்லாம் பத்திரிகை யிலே பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் உடல் நிலையைக் கவனித்தால், எனக்கு இதுவே கடைசி மாநாடாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு என் இறுதி வணக்கத்தைத் தெரி வித்துக் கொள்ளவே இன்று வந்தேன். என் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. நோயினால் படுத்த படுக்கையாக இருந்து வந்தேன். இனி, என் உடல் தேறும் வரை நான் இயக்கப் பணியில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறேன். இது எனக்கு மிகவு வேதனையைத் தருகிறது" என்று கூறினார். ஆம்! அழகிரிக்கு அதுவே கடைசி மாநாடாயிற்று. அதன் நோயில் விழுந்தவர் எழவேயில்லை.