உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இந்திய அரசியல் சட்டம், 1935-ஆம் ஆண்டின் இந்தியச் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, இந்திய அரசியல் சட்டமானது முறையான கூட்டாட்சி அமைப்பு முறையைக் கொண்டது அல்ல." "மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் சட்டம் செய் வதற்குப் பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு." இதுதான் மேற்கு வங்கம் தொடுத்த வழக்கில் நம்முடைய அரசியல் சட்டத்தினைப் பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட ண்மை. 1935-ஆம் ஆண்டின் இந்தியச்சட்டத்தின் அடிப்படையில் அமைந்த அரசியல் சட்டத்தைத் திருத்துமாறும், மாநிலங்களுக்கான அதிக அதிகாரம் தருமாறும் நாம் கேட்பதைத்தான் இன்று பிரிவினை வாதம் என்று திசை திருப்புகிறார்கள். ஆந்திரமும் வங்கமும் எப்படிக் குரல் கொடுத்த போதிலும், தி.மு. கழகத்தின் நடவடிக்கைகளை ஒடுக்கி விடலாம் என்கிற ஒரே நப்பாசையின் காரணமாகவே 16-ஆவது திருத்தம் நிறைவேற்றப் பட்டது. இந்த அறைகூவலைத் தி.மு. கழகம் மிகத் தைரியமாக ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில், "16-ஆவது திருத்தத்தில் காண்பிக்கப் பட்ட அவசரம், இந்தித் திணிப்பினைத் தவிர்க்கும் ஆங்கில நீடிப்பு மசோதா நிறைவேற்றுவதில் காண்பிக்கத் தவறுவது ஏன்?" என்று தி.மு. கழகம் பண்டித நேருவுக்குப் பதில் அறைகூவல் விடுத்தது. 16-ஆவது திருத்தத்தை நிறைவேற்றியதன் உண்மையான நோக்கம் பற்றிய பல்வேறு விளக்கங்களைக் காங்கிரசார் சொன்ன போதிலும், ஆங்கில நீடிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் கால தாமதப்படுத்துவதற்குப் பண்டித நேருவினாலேயே சரியான சமாதானம் சொல்ல முடியவில்லை. வழக்கம் போல, இந்தப் பிரச்சனையில் தி.மு. கழகம்தான் முன் னின்று நியாயம் கேட்க வேண்டியதாயிற்று. நாட்டின் சீன ஆக்கிர மிப்பு அபாயம் மத்திய அரசுக்கு எதிராக எத்தகு கிளர்ச்சி- அல்லது விமரிசனம் செய்யும் போக்கினைக் கையாண்டாலும், அவை எதிரிக்குச் சாதகமாகி விடுமோ என்று எல்லா அரசியல் கட்சிகளும் அஞ்சிடும் சூழ்நிலை. முறை மக்களின் நியாயமான 16-வது திருத்தம்; ஆங்கில நீடிப்பு இந்தச் சந்தடியில், தென்கை யீடுகளை ஒடுக்கும் வகையில், மசோதா நிறைவேற்றுவதில் தயக்கம். 418