உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1963 துவக்கத்திலே இத்தகு நெருக்கடிகளைச் சமாளித்துக் மிகப் கழகத்தை காப்பாற்றி அதன் மூலம் தமிழகத்தை காப்பாற்றும் பெரிய பணிகளில் அண்ணா அவர்களுடன், அனைவரும் கடுமையாகப் பணியாற்ற வேண்டி ஏற்பட்டது. பண்டித நேருவின் புகழையும் பெருமைகளையும் சீன ஆக்கிரமிப்பு கணிசமாக வெளிநாடுகளில் குறைத்து விடடது. அதே போல், ஆங்கில நீடிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் காட்டிய தயக்கம் காரணமாக உள் நாட்டிலும் அவர் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அவர் -- கற்ற பரந்த கல்வி -பெற்ற அரசியல் திட்பம் பயின்ற ஜனநாயக முறை - அத்தனையும் 1963-இல் இந்தி ஏகாதிபத்தியவாதிகளிடம் பின் வாங்கின. பிப்ரவரி 17-இல் கூடிய காங்கிரஸ் பாராளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், ஆங்கில நீடிப்பு மசோதா பற்றிய பிரச்சினையை, திரு கே.அனுமந்தையா அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இது சம்பந்தமாகத் தென்னாட்டில் தி.மு. கழகம் தெரிவித்து வரும் கருத்துக்களையும் இதழ்களின் கருத்தையும் அந்தக் கூட்டத்தில் அனுமந்தையா நேருவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அத் துடன் அடுத்து கூடும் பாராளுமன்ற. தொடரிலேயே மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் அப்போது வலியுறுத்தினார். ஆனால், நேருவின் பதில், பிரச்சினையிலிருந்து நழுவுவதாக அமைந்தது. நடைபெறும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் முக்கிய அலுவல்கள் முடிந்து விட்டால், ஏப்ரல் 20-க்குப் பிறகு இந்த மசோதா கொண்டு வரப்படலாம் என்பது நேருவின் மழுப்பல். இது குறித்து வழக்கத்திற்கு மாறாக, 'இந்து' பத்திரிக்கையே சற்று ஆத்திரமாக எழுதிற்று. 20-2-63 நாளன்று வழக்கை முடிக்கவும்' (Close the case) என்கிற தலைப்பில், அந்த இதழ் தீட்டிய தலையங்கத் தில், 1965-ஆம் ஆண்டுக்குப் பிறகும், காலக்கெடுவின்றி ஆங்கிலம் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படும் திருத்த மசோதா விரைவில் சட்ட மாக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. இந்தி வெறியர்களின் கரம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் தடுக்க மசோதாவை விரைவில் சட்ட வேண்டுமானால். ஆங்கில நீடிப்பு மாக்குவதுதான் சிறந்த வழியாகும். . "தேவைப்படுகின்ற இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மொழிவெறியர்களின் இன்னும் இரண்டு ஆண்டு காலம் (1965வரை) அவகாசம் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், சமீப காலத்தில் 419