உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'விகார சொரூபம்' தலையெடுத்துள்ளதால், அச்சக்திகளோடு போராடு வதில் ஒரு நிமிடத்தைக் கூட இழந்து விடக்கூடாது” என்று அந்த இதழ் எழுதிற்று. தி.மு. கழகம் ஒரு நிமிடத்தையும் வீணாக்காது இந்தப் போராட் டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. 1953-இல் கழகம் மும்முனைப் போராட்டத்தின் மூலம் அநீதிகளை எதிர்த்தது. 1963- இல் நீதியைக் கேட்டுப் போராடிற்று. இந்தி வெறியைப் பற்றியும், அந்த மொழி அகில இந்திய மொழி யாக அரசியல் சட்டத்தில் இடம் பெறுவதற்குக் காரணமான சக்தி களைப் பற்றியும், கழகம் தனது விளக்கங்களை நாட்டு மக்களிடம் எடுத்து வைக்க ஆயுத்தமான போது, டாக்டர் இராசேந்திரப் பிரசாத் பிப்ரவரி 28-இல் காலமானார். தேசியப் அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையிலும் சரி, போராட்ட வீரர் என்பதிலும் சரி, இராசேந்திரப் பிரசாத் ஒரு சிறந்த மனிதர். அவரது மறைவுச் சூழ்நிலையில் நாடு ஆதிக்கம் குறித்து அவ்வள துக்கம் கொண்டாடும் நேரத்தில் என்று அறிஞர் அண்ணா கருத்தறிவித்தார். வாக ஏனென்றால், இந்திதான் தேசிய மொழி என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டதற்கு இராசேந்திர பிரசாத் அவர்கள் முக்கியக் காரணமாக இருந்தார்.