உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 பாராட்டுக் கோட்டை பாளையங்ைேடச் சிறையிலிருந்து வெளி வந்த என்னைப் பாராட்டுக் கோட்டைமீது அமர்த்திக் களித்திடும் ஆர்வம் ததும்பிற்றுக் கழக நண்பர்களிடம். மாநாடுகளுக்கு நிகரான கூட்டங்களை ஆங்காங்கே ஏற்பாடு செய்தார்கள் அவர்கள். மாநிலம் எங்கணும் இயக்கத்தின் இலட்சிய கீதங்களை இசைத்திடவும்- எதிர் முகாம் களில் இருப்போரின் எதேச்சாதிகாரப் போக்கினை இடித்துரைக்கவும்- அந்தக் கூட்டங்களை ஒரு வாய்ப்பாகக் சுருதியே அவற்றிலே கலந்து கொண்டேன், தோழர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு. சென்னை. நுங்கம்பாக்கம், ஏரித் திடலில்தான் முதல் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதிலே கலந்து கொண்ட அண்ணா அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்: ... கரும்பைக் கத்தியால் வெட்டாமல் கடித்துச் சாப்பிடும்போது சுவையுள்ள சாறு வரும்; அதோடு கரும்பு குத்துவதால் ஈறில் பட்டு இரத்தமும் வரும். இரத்தத்தைப் பார்த்ததும், 'ஜயோ, ரத்தம்!, என்று பயப்பட்டாலும், கரும்பின் சுவையுள்ள சாற்றைச் சுவைக்கும் போது அது தெரிவதில்லை. அதுபோல், தம்பி கருணாநிதியைச் சிறைச் சாலையில் அடைத்தபோது, கரும்பைத் தின்றபோது வந்த ரத்தத்தைக் கண்டு, 'ஆ! ரத்தம்!' என்று கூறியது போல, 'தம்பியை அடைத்து விட்டார்களே!' என்று எண்ணினேன். ஆனால் கரும்பின் சுவையை அனுபவித்தது போல், பாதுகாப்புச் சட்டத்தைத்தானே போட்டாய்; வேறு எந்தச் சட்டமும் பலிக்கவில்லை என்று கண்டு கொண்டாயா? சபாஷ்!' என்று ஆட்சியாளர்களைக் கேட்கும் மகிழ்ச்சி உணர்வுதான் வந்தது." அண்ணாவின் இந்த உவமை நயம் கன்னல் சாறாகவே எனக்கு இனிப்பினை வழங்கிற்று. நன்றியுரை ஆற்றிய நான். ... மறைந்த மாவீரர் பன்னீர் செல்வம் தனது தோளுக்கிட்ட மாலையைப் பெரியாரின் தாளுக்கிட்டார். இன்றும் என் கழுத்தில் விழுந்த மாலைகள் அனைத்தையும் என் அண்ணனின் காலுக்குப் போடப்பட்ட மாலைகள் என்றுதான் நான் கருதுகிறேன்" 595