உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். நெஞ்சுக்கு நீதி83 தரவேண்டுமென்று ஆதித்தனார் அவர்கள் என்னை “இரண்டாவது அண்ணா" என்று அழைத்தமைக்கே நான் அவரிடம் கோபித்துக் கொண்டேன். அண்ணாவைப்போல் இன்னொருவர் உருவாக முடியாது என்றும் ஆதித்தனாரிடம் சொன்னேன். தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தை, திடீரென தாயை இழந்துவிட்டால் புட்டிப்பால் தான் அருந்த வேண்டி வரும். அண்ணா அவர்கள் தாய்ப்பால் என்றால் என்னைப் புட்டிப்பால் அளவுக்காவது ஏற்றுக் கொண்டு உடனிருந்து உதவுங்கள்." இப்படி அந்தக் கூட்டத்தில் நான் பேசியபோதிலும், பேராசிரியரைப் போலவே சிலர் கொண்டிருந்த ஐயப்பாட்டை நீக்குவதற்கும், தோளில் சுமத்தப்பட்ட பொறுப்பைத் தாங்கக் கூடியவன்தான் என்று நிலைநாட்டுவதற்கும் ஒயாத உழைப்பை நல்கிட வேண்டுமென்பதை உணர்ந்திருந்தேன். "நீ படிக்கிற அழகைப் பார்த்தால் பரீட்சையில் முதல் மாணவனாக அல்ல; கடைசி மாணவனாகத் தேர்வு பெறுவது கூடக் கஷ்டம்தான்!" என்று தம்பியைப் பார்த்துத் தமையன் சொல்வது அந்தத் தம்பிக்கு ஒரு போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும் என்ற சகோதர பாசத்தாலும் இருப்பது உண்டல்லவா? அந்தப் பாச உணர்ச்சியோடுதான் அன்றைக்குப் பேராசிரியர் பேசினார் என்பது பிற்காலத்தில் அவரது நடவடிக்கைகளின் வாயிலாகத் தெளிவாயிற்று. மனத் தூய்மையுடன் இடித்துரைப்பதால், நன்மை விளையும்! மனத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு இனிப்பு ஒழுகப் பேசு வதால் அதனை நம்புவோர்க்குத் தீமையே சூழும்! இடித்துரைத்த பேராசிரியர், எனக்கும் கழகத்திற்கும் தாங்கொணாத இடர்கள் வந்துற்றபோது தனது கொள்கை உறுதியையும், ஆழத்தையும் செயல் மூலம் வெளிப்படுத்தினார். நட்பின் இனிப்புரை வழங்கிய வழங்கிய பலரோ இயக்கத்திற்கு இடர் வந்துற்றபோது, படர் கொடியானார், எதிர் வீட்டுக் கொம்பில்! பதவியும், பவிஷுமே அவர்களை ஆட்கொண்டன! அவற்றைத் துச்சமெனக் கருதி கால்தூசு எனக் கூறி கழகம் காத்திட எனக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்கும் பேராசிரியர் அவர் கள் இன்று என்னைத் தலைவனாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நான் உழைத்திருக்கிறேன் என்பதைத் திரும்பிப் பார்த்து ஆனந்தப் பெருமூச்சு விடுகிறேன்.