உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64நெஞ்சுக்கு நீதி அண்ணாவின் மறைவினால் மேலவையில் ஏற்பட்டிருந்த காலி இடத்திற்கு அண்ணாவின் துணைவியார் ராணி அண்ணியார் அவர்களை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் சார்பில் தேர்ந்தெடுத்து மேலவையில் அமரவைத்தோம். மேலவையில் ஆளுநர் உரையின்மீது நடந்த விவாதத்தில் முதன்முதலாக நான் பதில் அளித்தது பற்றி மெயில்" ஆங்கில ஏடு 2-3-69 அன்று எழுதியிருந்தது வருமாறு: "தமிழக மேலவையில் ஆளுநர் உரைமீது நடைபெற்ற விவாதத்திற்கு, திரு. கருணாநிதி தந்த பதிலுரை பாராட்டுக்குரிய தன்னடக்கத்தோடு அமைந்திருந்தது. மத்திய மாநிலத் தொடர்பு பற்றிய விஷயத்தில் விவரமான்தொரு அறிவிப்பை வெளியிட மேலவையைத் தக்கதொரு விவாத மன்றமாக அவர் தேர்ந் தெடுத்துள்ளார். மத்திய ஆட்சிக்குத் தமது ஒத்துழைப்பை நல்கும் அதே வேளை அந்த ஒத்துழைப்பானது ஒரு சார்பிலிருந்து மட்டும் கிடைக்கக்கூடிய ஒத்துழைப்பாக இருக்க முடியாது என்றும். அது இரு சார்பிலும் ஒருவருக்கொருவர் அளிக்கக்கூடிய ஒத்துழைப்பாகவே அமைய முடியும் என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக உறுதியாகக் கூறியுள்ளார். இது, ஒரு முதலமைச்சர், ராஜ தந்திரத்தோடு-அதே நேரம் உறுதியான தன்மை படைத்தவராகவும் இருக்கமுடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தமிழகத்திற்கு ஒரு லட்சம் டன் அரிசி உடனடியாக வழங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தி யுள்ளார். இவையெல்லாம் மத்திய அரசின் உறவு நிலையில் திரு. அண்ணாதுரை அவர்கள் கையாண்ட உத்திகளை நினைவு படுத்துகின்றன. இதனையடுத்து சென்னை இராயபுரத்தில் மீன்பிடித் துறைமுக அழைப்புக்கான தொடக்க விழா நிகழ்ச்சி என்னுடைய தலைமையில் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம் அவர்களால் நடத்திவைக்கப்பட்டது. 9-3-69-60 நடைபெற்ற அந்த விழாவில் பேசிய ஜெக ஜீவன்ராம் அவர்கள், "தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரை நான் பாராட்டுகிறேன். வலிமையும் தகுதியும் உடைய ஒருவரது கரங்களில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. திரு அண்ணாவின் நம்பிக்கைக்கு உகந்த தோழர்களில் ஒருவராக விளங்கியவர் கருணாநிதி. அவரது தலைமையில் தமிழ்நாட்டு