உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்குநீதி 65 மக்கள் அமைதியான சுகவாழ்வைப் பெறுவார்கள் என்றும், நாட்டின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் பாதுகாப்பும் வலிவடையும் என்றும் நம்புகிறேன். மத்திய அரசில் உள்ள என் போன்றோரின் ஒத்துழைப்பு எல்லா வகையிலும் அவருக்கு இருந்து வரும் என்று உறுதியாகத் தெரிவிக்கிறேன்" என்று உற்சாகம் கரைபுரளக் குறிப் பிட்டார். அன்று பாபு ஜெகஜீவன்ராம் பேசியது வெறும் சம்பிரதாயப் பேச்சல்ல! எத்தனையோ அரசியல் கொந்தளிப்பு களுக்கிடையிலேயும் அவருக்கும் எனக்குமுள்ள தொடர்பு எள் முனையளவு கூடத் தேய்ந்து போனது கிடையாது! பெரியார், அண்ணா திராவிடர் இயக்கம், அந்த இயக்கத்தைக் கட்டிக் காக்கும் வழித்தோன்றல்கள் என்றைக்குமே அவரது நெஞ்சில் நீங்காத இடம் பெற்றிருப்பதை நானறிவேன். டெல்லிக்கு நான் செல்லும்போது ஒன்றிரண்டு தடவை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அவரைப் பார்த்து உரையாடா மல் திரும்பியதில்லை. அவரும் சென்னைக்கு வரும்போதெல்லாம். என்னைச் சந்தித்து உரையாடிவிட்டே திரும்புவார். பதவிகளில் இருந்த நேரங்களிலும் சரி, இல்லாத நேரங்களிலும் சரி - அந்த நட்புணர்வு நைந்து போனதில்லை. தாழ்ந்தப்பட்ட சமூகத்திலிருந்து என் மகன் அழகிரிக்குப் பெண்கொண்டு திருமணம் 1972-ல் நடைபெற்றபோது, தாங்கொணாத மகிழ்ச்சியுடன் அந்தக் கலப்புத் திருமண விழாவுக்கு வந்திருந்து தனது குடும்பத்தில் நடை பெறும் ஒரு நிகழ்ச்சிபோலவே கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் சமுதாய முன்னேற்றத்திற்குத் திராவிட இயக்கம் பெருங் கடமை ஆற்றி வருகிறது என்பதிலே அவருக்கு ஒரு தனி உவகையும் பெருமை யும் உண்டு. 1969 மார்ச் முதல் வாரத்தில் மேற்கு வங்கத்து அரசியல் நிலைகுறித்து அறிந்துகொள்ள வேண்டியதும், அதில் கழகம் எடுத்த நிலையும் முக்கியமானதாகும். மேற்கு வங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அமைச் சரவை லைக்கப்பட்டு, அதன் தொடர்பாக நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. மீண்டும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செல்வாக்குள்ள ஐக்கிய