உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நெஞ்சுக்கு நீதி கருத்து இந்த உடன்பாடு குறித்து சி. சுப்பிரமணியம் வெளியிடும்போது "தி.மு.கழகத்திற்கும் காங்கிரசுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற் கிறேன். நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் நான் போட்டி யிடப் போவதில்லை. நான் எந்தவொரு தொகுதியிலும் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். சிண்டிகேட் காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பதை மனதிற் கொண்டு இந்த முற்போக்கு கூட்டணியின் உடன்பாடு ஏற்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்" என்றார். இறுதியாக கழகக் கூட்டணியின் சார்பில் சட்டமன்றத் திற்கு கழகம் 201 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களிலும், பார்வர்டு பிளாக் 9 இடங்களிலும், முஸ்லீம் லீக் 8 இடங்களிலும், பி. சோ. கட்சி 4 இடங்களிலும், தமிழரசு கழகம் 2 இடங்களிலும் கழகம் 24 இடங்களிலும், காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு 10 இடங்களிலும் (பாண்டிச்சேரி உட்பட), முஸ்லீம் லீக் 1 இடத்திலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், பார்வர்டு பிளாக் 1 இடத் திலும் போட்டியிட்டன. கழகத்துடன் தேர்தல் உடன்பாடு இல்லையென்றால் போட்டியிடப் போவதில்லை என்று கூறிக் கொண்டிருந்த மோகன் குமாரமங்கலம், பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அண்ணாவை இழந்துவிட்ட நிலையில் கழகம்! ராஜாஜி அவர்களும் காமராஜர் அவர்களும் ஒன்றாக இணைந்து கழகத்தின் தலைமையில் இருந்த முற்போக்குக் கூட்டணியை வீழ்த்த வேண்டுமெனக் கச்சை கட்டி நின்ற தேர்தல் களம்! சேலத்தில் பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் இராமர் போன்ற கடவுளர் சிலைகளைக் களங்கப்படுத்தி விட்ட தாகப் பரபரப்பான பரபரப்பான பிரச்சாரம்! அரசாங்கத்தின் தலைமைப் பீடத்தில் இருந்த முக்கியமான இரண்டொரு அதிகாரிகளேகூட ராஜாஜி அவர்களையும், காமராஜர் அவர்களையும் ரகசியமாகச் சந்தித்து கழகத்தையும், கழகத்தின் தோழமைக் கட்சிகளையும் தோற்கடிக்க முழு முயற்சிகளை மேற்கொண்ட வெளிப்படை யான சதிச் செயல்! இத்தனையையும் எதிர்கொண்டு கழகத் தலைமையில் முற் போக்குக் கூட்டணி தேர்தல் களம் புகுந்தது.