உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 நெஞ்சுக்கு நீதி உயர்ந்த பதவியில் இருந்த சி.வி. நரசிம்மன் எனக்கு ஒரு விருந்து அளித்தார். ஐ.நா. மன்றத்தில் இந்தியத் தூதுக்குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரியின் ஏ.எஸ். மணி என்னுடன் வந்திருந்து விளக் கங்களைத் தந்தார். ஐ.நா. மன்ற நடவடிக்கைகளை இந்தியப் பிரதிநிதிகளுடன் அமர்ந்து கவனித்தேன். ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் ஊதாண்ட் அவர்கள் உடல்நலமின்றி மருத்துவ மனையில் இருந்த காரணத்தால் அவர் தொலைபேசியின் மூலம் என்னைத் தொடர்புகொண்டு விசாரித்தார். நியூயார்க் நகரில் "ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிலையம்" சென்று அங்குள்ள கம்யூட்டர் இயந்திரங்களின் வேலைமுறைகளை அறிந்து கொண்டேன். நியூயார்க் நகரில் செய்தியாளர்கள் பேட்டி கண்டபோது;- இந்தியாமீது பாகிஸ்தான் பகை கக்குவதை நான் வன்மையாகக் கண்டித்து, பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்களை மறுத்து விளக்கங் கள் அளித்தேன். "நீங்கள் அமெரிக்க பயணத்தை மேற்கொண் டிருப்பது உங்கள் சொந்த முடிவின் மீதா அல்லது பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்த யோசனை மீதா?" என்று கேட்டதற்கு "நான் இந்தியாவுக்காகப் பேசுகிறேன்; இந்திராவுக்காக அல்ல" என்று விடையளித்தேன். சேர்ந்து நியூயார்க் நகரில் வாழும் தமிழர்கள் ஒன்று "தமிழ்ச் சங்கம்" அமைத்து அதன் தொடக்க விழாவில் என்னைக் கலந்துகொள்ள அழைத்தார்கள். அதன்படி அந்த விழாவில் கலந்துகொண்டு நியூயார்க் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்தேன். தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் பி.எஸ். குமரேசன் என்னை வரவேற்றுப் பேசினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதன் முதலாக இணைந்த பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றான மேரிலாந்து மாநில ஆளுநர் மார்வின் மாண்டலை டிசம்பர் முதல் தேதியன்று சந்தித்தேன். அவர் எனக்கு அம்மாநிலத்துச் சின்னம் ஒன்றையும்-இரட்டைச் சங்கிலி ஒன்றையும் பரிசாக அளித்தார். பின்னர் முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் துணைத் தலைவரும் செனட் சபை உறுப் பினருமான ஹம்ப்ரேயைச் சந்தித்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் அவருடன் உரையாடினேன். அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் நான் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மும்முர மடைந்தது. இந்தியா-பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் டாங்கிப் படைகளையும், ராணுவத்தையும் பாகிஸ்தான் குவித்து வைத்துக் கொண்டு, இந்தியப் பகுதியை நோக்கிச் சுட ஆரம்பித்தனர்.