உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 செயற்குழுவின் சீற்றம் நானும் மதுரையில் இருந்த என்னை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்தின் முன்னோடிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் மனக்குமுறலை வெளியிட்டு உடனடியாக நண்பர் எம். ஜி. ஆர். அவர்கள் மீது நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். நண்பர் மதுரை முத்து அவர்களும் மதுரையிலிருந்து உடனடி யாகச் சென்னை திரும்பினோம். அக்டோபர் மாலையிலேயே பல்வேறு மாவட்டக் 9-ந் தேதி கழகச் செயலாளர்கள் சென்னை நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள். அக்டோபர் 10-ந் தேதி காலை தலைமைக்கழகத்தின் செயற்குழு உறுப் பினர்கள் இருபத்தி ஆறு பேர் கையெழுத்திட்ட ஒரு முறை யீட்டுடன் என்னையும் பொதுச் செயலாளர் நாவலர் நாவலர் அவர் களையும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சந்தித்தார்கள். தலைமைக்கழகத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த குழு செயற்குழு. அந்தக் குழுவில், கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 31 பேர் உறுப்பினர்கள். அவர்களில் 26 பேர் என்னையும் நாவலரையும் நெருப்புப் பொறி பறக்கும் கண்களுடன் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் எங்களிடம் அளித்த முறையீடு வருமாறு:- அண்மையில் சில நாட்களாகக் கழகப் பொருளாளர் திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் கழக சட்டத்திட்டத்திற்கு மாறாகவும், கழக அரசையும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களையும் குற்றம் சாட்டும் முறையில் கழகத்தையே இழிவுபடுத்திப் பேசி வருவ தாலும், கழகச் செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் மட்டுமே பேசக் கூடியதும், மறுக்கப்படக் கூடியதுமான பிரச்சினைகளைப் பொது மேடையில் பேசி பொதுமக்களிடையே குழப்பம் நடைபெற்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஆதரித்துப்பேசி, அந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறை வேற்றுவதற்கு ஒத்துழைத்திருந்தும் இப்போது அதனை எதிர்த்துப் பேசி வருகிறார். மேலும் கழகப் பொதுக்குழுவிலும் செயற் குழுவிலும் அவர் ஒரு தீர்மானத்தை கொண்டுவரப் போ விளைவித்து வருகிறார். மேலும் கோவையில் பொதுக்குழுவில் மதுவிலக்கு