உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

கலைஞர் மு. கருணாநிதி


256 கலைஞர் மு. கருணாநிதி "உழவனுக்கு வேண்டிய சிகிச்சைகள் எல்லாம் செய்தாகிவிட்டது. படுக்கையில்தான் இருக்கிறான் இனிப் பயமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்" என்று பதில் கூறினான் வீரன். 1 "கண் திறந்தானா? வாய் திறந்தானா?... ஏதாவது பேசினானா?" "பேசவில்லை அரசே! கண்ணை மட்டும் விழித்திருக் கிறான். விழிகள் ஒரு பக்கமில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கின்றன.” "அது என்னைக் காப்பாற்றும்போது ஏற்பட்ட அதிர்ச்சி...ம் நீ முன்னே போ; நானும் வருகிறேன். - என்று கரிகாலன், உழவன் படுத்திருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். உழவன், வீரன் கூறியவாறே படுக்கையில் அசையாமல் படுத்திருந் தான். அரசன் அவன் அருகே சென்று உட்கார்ந்தான். அரசனைக் கண்டதும் உழவனின் விழிகள் வேகமாகச் சுழன்றன. அரசன், உழவனின் நெற்றியை மெதுவாகத் தொட்டுப் பார்த்துவிட்டு, "எப்படியிருக்கிறது? என்று அன்பு ததும்பக் கேட்டான். உழவனின் கண்களில் நீர் ததும்பியதே தவிர, பதில் எதுவும் கிடைக்கவில்லை. "இனிமேல் ஏன் அழுகிறாய்? நான்தான் பிழைத்துக் கொண்டேனே!" என்று மன்னன் மிகப் பரிவுடன் ஆறுதல் கூறினான். உழவன் கரிகாலனையே பார்த்தவாறு படுத்திருந்தான். 'நீ செய்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? என் இதயப்பூர்வமான நன்றியை ஏற்றுக் கொள்! என்று தழுதழுத்த தொனியில் மன்னன் பேசினான். உழவன் மிகவும் சிரமப்பட்டு உதடுகளை அசைத்தான். "மன்னா! என் கடமையை நான் செய்தேன். அதிருக்கட்டும், அவள் என்ன ஆனாள்?" "அந்தோ பரிதாபம்! அவள் தன் காரியம் கைகூடாத ஏக்கத்தில் அங்கேயே விழுந்து செத்துவிட்டாள். அவள் சாவுக்கு நீதான் காரணம். நானா?" ஆமாம்! நீ தடுத்திராவிட்டால் அவள் என்னைக் கொன்றிருப்பாள்! அவளுக்கு நிம்மதி கிடைத்திருக்கும். அவள் பிணத்தைப் பார்த்தபிறகு நினைத்துக் கொண்டேன். அய்யோ! நான் மடிந்திருக்கக்கூடாதா என்று! கரிகாலன் இதைச் சொன்னதும் உழவனின் கண்கள் இரு அருவிகளாயின.