உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

கலைஞர் மு. கருணாநிதி


செழியன் அவள் பின்னாலேயே நின்று கொண்டிருந்தான். ப்போது அவனுக்கு அக்காளைப் பிரிந்த சோகமெல்லாம் சிறிது சிறிதாகக் கரைந்து விட்டது. அவன் உள்ளத்தை உலுக்கும் பிரச்சினை யொன்றுக்கு அவன் பதில் தேடித் தீரவேண்டிய அவசியத்திற்கு ஆளானான். 'உழவன் உடையில் இருக்கும் வளவனும், தாமரையும் முகக் குறிப்பால் பேசிக் கொள்ளக் காரணம் என்ன? அந்த உழவன் யார்?" என்ற கேள்விகள் அவனைத் திண்டாட வைத்தன. சோழ மண்ணுக்குப் பெரியதோர் அபாயம் வரக் காத்திருக்கிறதா? அல்லது தாமரையின் வாழ்க்கை ஏட்டில் இந்த உழவனுக்கு ஏதாவது ரகசிய இடம் கிடைத்திருக் கிறதா? இதற்கு எப்படிப் பதில் காணுவது? செழியன், தாமரைக்கு வாக்களித்துவிட்டு அவள் பின்னே வந்திருக்கிறான்! - அந்த வாக்குத் தவறுவதும் அழகல்ல என்பதை உணர்ந்திருக்கிறான். ஆனால் வந்த இடத்திலோ திடுக்கிடக்கூடிய சம்பவத்தைத் தன் இரு விழிகளால் கண்டுவிட்டது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் தாமரையுடன் திரும்பி விடுவது என்பது சோழநாட்டைக் காட்டிக் கொடுப்பது போலாகும் என்று மனசாட்சி வேறு அவனைக் குடைந்தெடுத்தது. இறுதிச் சடங்கினை முடித்துக் கொண்டு அனைவரும் திரும்பத் தொடங்கினர். தாமரையும் அவர்களுடன் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். திரும்புவ தற்குள்அண்ணனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று மீண்டும் எல்லாத் திசைகளிலும் கண்களைத் திருப்பினாள். இதுதான் நல்ல சமயமென்று செழியன், அவள் பார்வையிலிருந்து விலகிக் கொண்டான். அவன் மறைய முயலும்போது முன்பு தாமரைக்கு அவனளித்த வாக்குறுதி மனத்திரையில் நிழற்படமாக எழுந்தது. "தமிழ்நாட்டுப் போர்மறவன் எவனும் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு ஓடிவிடமாட்டான்! நம்பியவர்களை மோசம் செய்வது தமிழ்க் குருதி உள்ளவர்களின் பழக்கம் இல்லையென்பது உனக்குத் தெரியாதா என்ன? நான் சொல்வதைக் கேள்! அண்ணியின் இறுதிச் சடங்கை நடத்தி