உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

319


ரோமாபுரிப் பாண்டியன் 319 "உண்மை அதுவல்ல அமைச்சரே!... நாங்கள் காற்றோடு போட்டியிட் டுத்தான் சென்றோம்! தாமரையின் குதிரை கீழே விழுந்துங்கூட, ஒரே குதிரையிலே இருவரும் பறந்து விட்டார்கள்! காட்டைக் கடந்து செல்வது மன்னரைக் காட்டிக் கொடுக்கவும் வழி அமைத்து விடுமோ என்று திரும்பி விட்டோம் அமைச்சரே!", குதிரை வீரனின் நடுக்கம் கலந்த குரலைத் தொடர்ந்து, "அய்யோ!" என்கிற செந்தலையாரின் அலறல் காட்டையே கிடுகிடுக்க வைத்தது. 'அடப் பாவிகளே! இருப்பிடம் தெரிந்துவிடுமோ என்று பயந்து, நம் இதயத்தையே எடுத்து எதிரிக்கு அனுப்பி வைத்து விட்டீர்களே! இனி நடக்கப் போவது என்ன தெரியுமா?' -செந்தலையாரின் வேதனை கலந்த கதறலை. குதிரை வீரர்களைக் காட்டிலும் முத்துநகைதான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். "வேளிர் குடியிலே நஞ்சு கக்கிய கருநாகமாம் அந்தக் கரிகாலன் தன் சூதிலே வெற்றி கண்டுவிட்டான்! அரசியார் மறைந்து விட்டார்களே! அந்த வீழ்ச்சியைத் தன் வெற்றிக்கு அடிக்கல்லாக்கிக் கொண்டான்! இருங்கோவேளுக்கு விடுத்த அழைப்பிலேதான் அந்த ஆபத்தின் முழு உருவமே புறப்பட்டது! அந்தப் பறையொலியிலேயே வேளிர்குல மரண கீதமும் கலந்து விட்டது! மனைவியின் சடலத்தைக் காணத் துடித்துச் சென்றிருப்பார் மன்னர்! அந்த மதோன்மத்தனின் கூண்டுக்குள்ளேயும் சிக்கியிருப்பார்! எஞ்சியிருந்தாள் தாமரை: அவளையும் ஏமாற்றிக் கவர்ந்து சென்றுவிட்டான் பாண்டிய நாட்டானாம் பச்சைத் துரோகி! அய்யோ! வேளிர்குடியே பூண்டோடு அழிந்துவிட்டதே! அதன் வீர வரலாற்றிலே மாசு படிந்து விட்டதே! போர்க்களத்திலே எதிரியின் வேலுக்கு மார்பு காட்டினான் என்று இருங்கோவேளின் சரித்திரம் முடிந்திருந்தால் - அண்ணனைக் கொன்றவனின் அங்கத்தைத் துண் டாடிய பின்னரே - அவன் அந்தப்புரத்துப் பேரரசிகளின் அலறலைக் கேட்ட பின்னரே மறத்தமிழச்சியாகத் தாமரை மடிந்திருந்தால் காலமெல் லாம் அந்தக் குலத்தின் மேன்மைக்குப் போராடிய இந்தக் கிழவனின் ஆவியும் நிம்மதியாகப் பிரிந்திடுமே" கடலலைபோல் எழுந்த அந்தக் குரல் நடுங்கியது; செந்தலையார் பொங்கிவந்த அழுகையை அடக்க முடியாமல் விம்மினார். அவருடைய குரல், காட்டுக்கு விளிம்பு கட்டியிருந்த மர உச்சிகளில் மோதி எதிரொலித்திருக்கத்தான் வேண்டும். குரல்கேட்டு, அங்குமிங்கும் சிதறிக் கிடந்த வேளிர்குடி வீரர்கள் ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். பெருந் தேவியாரின் மரணத்தால் மனமுடைந்திருந்த அவர்கள் 'அதைவிட மேலான ஆபத்து ஏதேனும் வந்துவிட்டது