328
கலைஞர் மு. கருணாநிதி
328 கலைஞர் மு. கருணாநிதி ஆளென ஒளிந்து கொண்டார்கள் கோச்செங்கணான் உயர்ந்த மரமொன் றின் உச்சியில் மளமளவென்று ஏறினான். எதிரியின் படைகள் எவ்வளவு தூரத்தில் வருகின்றன என்று பார்ப்பதற்காகவே அவன் இத்துணை பரபரப்புடன் மரத்தில் ஏறினான். அந்த அவசரத்தில் மரக்கிளையென்று மலைப்பாம்பைப் பிடித்துக் கொண்டு கிளைக்குக் கிளை தாவினான் என்றால், அவனது உணர்ச்சியை அளவிட்டுக் காட்ட முடியுமா? உச்சியிலிருந்தவாறு இருங்கோவேளின் வேளிர் படைகள் வருகின்ற னவா என்று விழி வலிக்கும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த கோச்செங்கணான், கீழே குனிந்து அனைவரையும் தயாராகச் சொன்னான். அதோ இருங்கோவேளின் படைகள்! என்ன அதிசயம்! அனைவரும் பண்டார உடையில் அல்லவா வருகிறார்கள்! இப்படித்தானே முன்பொருமுறை பூம்புகாரில் நுழைந்து, செழியனைத் தூக்கிக் கொண்டு போனார்கள். முத்துநகைக்கு ஆவேசம் மிகுந்தது. "ம்! தயார்! தயார்!' என்று கீழே ஒளிந்துள்ள பூம்புகார் மக்களுக்கு ஆணையிட்டாள். இருங்கோவேளினது பண்டாரப் படை செந்தலையார் தலைமையில் புயல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. மரத்துக்கு மரம் பூம்புகார்ப் படையினர் பதுங்கிக் கொண்டு தங்கள் தலைவனின் அடுத்த கட்டளை களை எதிர்நோக்கியிருந்தனர். மரமாளிகையிலிருந்து புறப்பட்ட பண்டாரப்படை வீரர்களுக்குத் தங்களைச் சூழ்ந்து மரவியூகத்தில் எதிரிகள் ஒளிந்திருக்கிறார்கள் என்று எப்படித் தெரியும்? பண்டாரப் படையின் நீளத்தையும் அதில் வரும் வீர்களின் கம்பீரத்தையும் கண்ட முத்துநகை, தன் தலைமையிலுள்ள மக்கள் படையின் வலிமையை ஒரு கணம் எண்ணிப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். எனினும் அயர்ந்து போகாமல் ஆணையிடுவதற்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள். பூம்புகார் மக்கள் எத்தனை பேரை இந்த இடத்திலே பலியிட வேண்டுமோ என நினைத்துக் கவலைப்பட்டாள். அதே சமயம் தன்னைப் போன்ற வீரப்பெண்மணிகள் பலர் எதிரியின் படை பலத்தைச் சாய்க்கும் நோக்கத்துடன் மரங்களின் பின்னே ஒளிந்திருக்கும் காட்சி அவளுக்குத் தெம்பு கொடுத்தது பண்டாரப்படை, மரவியூகத்திற்கு அருகே வந்து விட்டது. அனைவருமே காவி கமண்டலங்களுடன் வருகிறார்கள். அந்தச் சாய உடைக்குள்ளே சாவுக் கருவிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. முன்னே