உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

கலைஞர் மு. கருணாநிதி


330 கலைஞர் மு. கருணாநிதி குதிரையில் வருபவனைக் கவனிப்பதா?பண்டாரப்படையின் மீது பாய்வதற்குத் தன் மக்களுக்கு ஆணையிடுவதா? அது மட்டுமல்ல- அங்கே உள்ள பயங்கரம்! அவள் மர உச்சிக்குச் செல்லும்போது ஏறிச் சென்றாளே, மலைப்பாம்பு - அது வேறு அவள் கீழே இறங்கி வரட்டும் என்றோ என்னவோ அடிமரத்துக் கிளையிலே அமைதியோடும் ஆவலோடும் படுத்துக் கொண்டிருக்கிறது! குதிரை, மிக வேகமாக வருவதைக் கண்டாள். மரவியூகத்துக்கு. பண்டாரப்படை முழுவதும் வந்து விட்டதையும் உணர்ந்தாள். இனித் தாமதிக்கக் கூடாது; என்ன ஆனாலும் ஆகட்டுமென்று, “கரிகால் மன்னர் வாழ்க!ம்... பாயுங்கள்!" என்று உரத்த குரலில் கூவினாள். பூம்புகார் மக்கள் சிங்கம்போல் கர்ச்சித்து நடுவில் சிக்கிய பண்டாரப் படையின் மீது பாய்ந்தனர், அவர்களுக்கு ஆணை பிறப்பித்த உணர்ச்சிப் பெருக்கோடு மரத்திலிருந்து அவசரமாகக் கீழே இறங்கிப் போரில் கலந்து கொள்ள அடிமரத்துக் கிளையில் குதித்த முத்துநகையை மலைப்பாம்பு சுற்றிக் கொண்டது! அதன் பயங்கரப் பிடியிலிருந்து தப்ப முடியாமல் முத்துநகை மரக்கிளையிலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தாள். தங்கள் தலைவன் கோச்செங்கணான் மலைப்பாம்பிடம் சிக்கித் தலைகீழாகத் தொங்குவதைக் கவனிக்காமல் பூம்புகார் மக்கள் வேளிர் வீரர்களை மடக்கி வீழ்த்துவதில் தீவிரமாக ஈடுபட்டனர். இருங்கோவேள் என்கிற கொடிய நச்சுப் பாம்பின் கோரப் பற்களுக்கிடையேயிருந்து சோழ மண்டலத்தைக் காக்கும் பயங்கரப் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்ட முத்துநகை, மலைப்பாம்பின் பிடியில் சிக்கிக் கொண்டதை யாருமே கவனிக்கவில்லை. "பாயுங்கள்?" என்ற தலைவனின் ஆணை புறப்பட்டது தான் தாமதம்; பூம்புகாரை வெற்றுப் பூமியாக்கி விட்டு வந்திருந்த பெரும்படை புயலில் பறக்கும் சருகைப் போல் பாய்ந்தது. வஞ்சினம் ஏற்று வந்தவர்களின் மேல் மன்னனைக் காக்கும் மகத்தான கடமையைப் பெற்றுவிட்டவர்கள் பாய்ந்து விட்டார்கள். உடலைப் பண்டார உடைக்குள்ளும், உள்ளத்தைப் பழி வாங்கும் உணர்ச்சிக்குள்ளும் மறைத்துக் கொண்டவர்களை நோக்கி, கோச்செங்க ணானின் ஆணைக்குத் தங்கள் உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து விட்டவர்கள் மோதிய அந்தக் காட்சிக்கு ஈடு. இதுவரை எந்த ஏடுகளிலும் காணாத ஒன்று. கற்பனைக் கண்களாலும் எவரும் காணச் சகிக்காத ஒன்று.