348
கலைஞர் மு. கருணாநிதி
348 யார்?... யார்?... யாரது? கலைஞர் மு. கருணாநிதி எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே! ஆமாம்.. வீரபாண்டியன் சாயல்தான்; இல்லை; இல்லை; அது வீரபாண்டியன்தான்! முத்தநகை தடுமாறிப் போய்விட்டாள். இறந்து போன வீரபாண்டி எப்படி வந்தான்? இருங்கோவேள் 'கொன்று விட்டேன்' என்று கொக்கரித்த பிறகு அந்த வீரத்திரு உருவம் மீண்டும் எப்படித் தோன்றுகிறது? அதுதான் 'பேய்' என்பதா? "கொலை செய்யப்பட்டவர்கள் பேயுருவில் திரிவார்கள் என்று சோழநாட்டிலே புதிதாகக் கருத்தொன்றைப் பரப்பி வருகிறார்களே வைதீகர்கள்; அதைப் போன்றதா அது?" என்னைத் தேடித்தான் வீரபாண்டியின் 'பேய்' பாழ்மண்டபத்தை முற்றுகை போட்டிருக்கிறதா? - மன்னனிடம் 'என்ன சொல்வது ?' 'எப்படிச் சொல்வது?' என்ற பதட்டத்தில் முத்துநகை துடித்துக் கொண்டிருந்தபோது, அந்த உருவம் அவளைக் கையசைத்து அழைப்பதாக அவள் உணர்ந்தாள். அதே நேரத்தில்... கரிகாலன் வானமண்டலத்திலே திடீரென்று எழும்பிய செந்நிறத்தை திகைப்புடன் பார்த்தான்! ஆமாம்; அவர்கள் விட்டு வந்த மரமாளிகைப் பக்கத்திலிருந்துதான் அந்த அக்கினி ஜ்வாலை எழும்பிக் கொண்டிருந் தது! தீ நாக்குகள் வானத்தை முத்தமிடத் துடித்துக் கொண்டிருந்தன! இந்த அதிசயத்தைச் சொல்ல, "முத்துநகை'! என்று கத்தினான், கரிகாலன்! தன்னுடைய மனப்போராட்டத்தைத்தான் மன்னர் தெரிந்து கொண்டு விட்டாரோ என்று பதறிப்போய்த் திரும்பினாள் முத்துநகை! திகைப்புடன் திரும்பிய முத்துநகையிடம், "நமது மக்கள் பகைவர்களைப் பழிவாங்குவதில் வரம்புமீறிப் போய்விட்டார்கள்! அதோபார், மரமாளிகைக்குத் தீயிட்டுவிட்டார்கள்” என்று வருத்தம் தெரிவித்தான் கரிகால் மன்னன். "அவர்களது ஆத்திரத்தை எப்படித்தான் தணித்துக் கொள்வது?" எனக் கேட்டாள் முத்துநகை. "தோற்றுப்போன பகைவனை நடத்த வேண்டிய முறையே, அவன் நாணித் தலைகுனியுமளவுக்கு அவனுக்கு நன்மை செய்வதுதான்!" எனப் பதில் கூறிய மன்னன் மரமாளிகையை அழித்துக் கொண்டிருக்கும்