உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

கலைஞர் மு. கருணாநிதி


ஆம். உண்மையிலேயே கண்களை மூடிக் கொண்டு சிந்தனையி லாழ்ந்திருந்த இருங்கோவேள் திடுக்கிட்டுப் பரபரப்புடன் எழுந்தான். கண்களைக் கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை. மனப்போராட்டத்தின் உச்சக்கட்டம் அதுவென்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான். அந்த நினைவு அலைகளால் அவன் உள்ளத்தில் ஒரு நல்ல முடிவு தோன்றியது. அந்த முடிவினை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதி யுடன் கைகால்களை உதறிக் கொண்டு எழுந்தான், புதிய உற்சாகத்துடன். நினைவில் வந்த முத்துநகை இறுதியில் மேற்கொண்ட முடிவே சாலச் சிறந்தது என்று எண்ணிக் கொண்டான். நினைவில் கண்ட காட்சியில் கொல்ல வந்த முத்துநகையை இருங்கோவேள் தடுத்தான். ஆனால் நேரில் வரப் போகிற முத்துநகை யைத் தடுக்காமலே இருந்துவிட்டால்? இந்த யோசனை அவனுக்குப் புதிய உணர்வை அளித்து விட்டது. படுக்கைக்கு கீழே ஒளித்து வைத்திருந்த மூட்டையை எடுத்துப் பிரித்தான். அதில் யவனருக்குரிய உடைகள் இருந்தன. அந்த உடைகளை அணிந்து கொண்டான். யவனக் கிழவரானான்! "வீரனே! இன்றிரவு நடுயாமத்தில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு நீ வரவேண்டும். உன்னிடம் சில முக்கியமான செய்திகளைச் சொல்ல இருக்கிறேன். அவைகளை நீ நிறைவேற்றியாக வேண்டும்." இருங்கோவேள் கூறிய இந்த வார்த்தைகள், செழியன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. கரிகால் மன்னனுக்கெதிராகப் பயங்கர மான சூழ்ச்சித் திட்டம் ஒன்றினை நிறைவேற்றுகின்ற பொறுப்புத் தன்னி டம் விடப்பட இருக்கிறது என்று எண்ணிய அதே நேரத்தில், அந்தத் திட்டத்தை முறியடித்து இரண்டாவது முறையாகச் சாவின் வாயிலிலி