412
கலைஞர் மு. கருணாநிதி
412 கலைஞர் மு. கருணாநிதி "என்ன ஆசை? எதுவானாலும் சொல்லும்; உடனே நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான் கரிகாலன். 'முத்து... முத்துநகை மடியிலே நான் சாக வேண்டும்... 'திகீர்' என்று இருந்தது முத்துநகைக்கு; தான் ஒரு பெண் என்பதையும் மறந்து எகிறிக் குதித்தாள்; எரிமலையாகி விட்டாள். அடப்பாவி! உனக்கா என் மடியைக் கொடுப்பேன்? உன்னைப் போன்ற ஒரு வஞ்சகனையா நான் காதலிப்பேன்? சாகப்போகிற வேளையிலே உனக்கு ஏன் இந்த கேடு கெட்ட ஆசை?" இருங்கோவேளின் இதழ்களில் ஒரு வறண்ட புன்னகை யோடிற்று. 14 ழை 'அடி பேதைப் பெண்ணே!... நான் தான் 'வீரபாண்டி, என்னைத்தான் நீ காதலிக்கிறாய்?" என்று நாக்குழறிற்று இருங்கோவேளுக்கு. "என்ன! நீயா வீரபாண்டி! நீயா வீரபாண்டி! அய்யய்யோ!" என்று ஆங்காரத்துடன் அலறினாள் முத்துநகை. அடுத்த கணம் தலைசுற்றிய பம்பரம்போலத் 'தடால்' என்று மயங்கி விழுந்தாள் "அய்யோ! முத்து' என்று கதறியவாறே அவள் அருகே ஓடி அள்ளி அணைத்தார் காரிக்கண்ணனார்! முத்துநகை மயக்கமுற்று விழுந்திடக் கண்டதும் பதறிப்போனான் கரிகாலன். தன் காதலனின் பிரிவினைத் தாங்கிட இயலாமல் சாதலினைத் தழுவிடுவாளோ என்ற கலக்கம் ஏற்பட்டது அவனுக்கு. உடனே எழுந்து சென்று அவளைக் கவனிக்க எண்ணினான். அதற்குள் இருங்கோவேளின் மூச்சு இயற்கையில் கலந்துவிட்டது; ஆம் அவனுடைய தலை சட்டென்று தொங்கிப்போயிற்று. அவனைத் தன் மடியினின்றும் அகற்றித் தரையிலே வைத்திட்ட கரிகாலன், முத்துநகை யின் தளிருடல் நோக்கி விரைந்தான். கண்ணீர் மழை பொழிந்து கலங்கிப் புலம்பும் காரிக்கண்ணனாரின் மார்பிலே வேரிழந்த கீரைத் தண்டாய்த் துவண்டு கிடந்த அவளுடைய முகத்தருகே தன் கரத்தினை நீட்டினான். "கலங்க வேண்டாம், புலவரே! முத்துநகை கண்டிப்பாகப் பிழைத்துக் கொள்வாள்; கவலைப்படாதீர்கள்!" என்றவன் தமக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த வீரர்கள் மீது பார்வையை வீசினான். "ஏன் இப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? யாராவது ஓடிப்போய் பக்கத்திலுள்ள பொய்கையிலிருந்து கொஞ்சம் நீர் கொண்டு வரக்கூடாதா?' என்று கடிந்தான்.