உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

439


ரோமாபுரிப் பாண்டியன் 439 "முத்துக்குளிப்பு விழாவைத் தாங்கள் தொடங்கி வைத்ததை நான்தான் நேரில் பார்த்தேனே!" 44 "ஆனால் நான் உன்னை..." என்று ஏதோ சொல்லிட வாயை எடுத்த அவன், பேச்சை மாற்றி, "ஆமாம், நீயார், எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று இரங்கிய குரலில் கேட்டான். "என்னைப் பற்றி தெரிந்து கொண்டு தங்களுக்கு என்ன ஆகப்போகிறது? "என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்? சீறி வந்த புலியையே முறத் தினால் துரத்தியடித்தாள் தமிழ் மறத்தி ஒருத்தி என்று சொல்வார்கள். அவளுடைய துணிச்சலைக் காட்டிலும் உன்னுடையது ஒன்றும் குறைந்தது அல்லவே! அதற்காக உன்னை என் அரண்மனைக்கே அழைத்துச் சென்று என் மண்டல மக்களுக்கெல்லாம் உன்னை அறிமுகப் படுத்திடவும், பாராட்டு விழா நடத்திப் பரிசளிப்பு உனக்கு ஏராளமாக வழங்கிடவும் நான் எத்தனை எத்தனையோ திட்டங்களையெல்லாம் என் நெஞ்சிற்குள்ளே தீட்டி வைத்திருக்கிறேன் தெரியுமா?" "தாங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது." “ஏன்? என்னுடைய சொற்களில் உனக்கு நம்பிக்கை இல்லையா?" "நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் நான் யார் என்று தெரிந்தால் தாங்களே என் மீது அருவருப்படைவது மட்டுமல்ல, வெறுப்புற்றாலும் வியப்பதற்கில்லை. பிறகு. தங்கள் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடி ஆகிவிடும்! - "நீ யாராக இருந்தாலும் எனக்குக் கவலையே இல்லை. நீ எந்தக் குடியில் பிறந்தவள் ஆனாலும் சரி; எத்தகைய குணம் கொண்டவள் ஆனாலும் சரி; நீ இந்த நாட்டுக்குரிய மொழியைப் புறக்கணித்தவர் களுக்கு அவமதிப்புச் செய்தவர்களுக்கு-சரியான பாடம் புகட்டி யிருக்கிறாய்; அதற்காக உன் உயிரைக்கொடுத்திடவும் தயங்கிடாமல் போராடியிருக்கிறாய். அது ஒன்றுக்காகவேனும் நான் உன்னை கொண் டாட வேண்டாமா? இல்லையென்றால் நான் நன்றி கொன்றவன் - மொழிப் பற்றோ, இனப்பற்றோ இல்லாதவன் என்று என் நாட்டு மக்களே என்னைத் தூற்றமாட்டார்களா? அதற்காக நான் உன்னை என் அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு போய்தானே ஆக வேண்டும்?" "இளவரசே! தாங்கள் என்னிடம் வைத்துள்ள பெருமதிப்பிற்கு நான் மிகவும் தலை வணங்குகிறேன். ஆனால் நான் தற்பொழுது தங்கள் அரண்மனைக்கு வருவதால், தங்களுக்கே என் வருகை கெடுதலாக