உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

கலைஞர் மு. கருணாநிதி


492 கலைஞர் மு. கருணாநிதி கொல்லாமை, கள்ளுண்ணாமை போன்ற அடிப்படைக் கொள்கைகளை யெல்லாம் அண்மைக்காலமாக எந்த சமயம் தன்னுடையதாக்கிக் கொண்டு தழைத்துப் படர்கிறதோ, அந்தச் சமயம் தான் திராவிட சமயத்தின் உயிர்நாடியான தத்துவங்களையும் தனக்கே உரித்தாக்கிக் கொண்டு வளர்ந்து, திராவிட சமயத்தின் பெயரே மறைந்திடுமாறு செய்து வருகிறது..." "ஆமாம்; திராவிட சமயம், பெளத்த சமயம், சமண சமயம் இவற்றின் கருத்துக்களை இரவல் வாங்கி வளரும் அந்த வேறோர் சமயத்திற்கும் இந்த வழக்கத்திற்கும் என்ன தொடர்பு” "தொடர்பு இருக்கிறது! அவையத் தலைவர் அவர்களே; தொடர்பு இருக்கிறது! இந்த பௌத்த-சமணச் சமயத்தினர் இடையே கசப்பு ணர்ச்சியை மறைமுகமாக நின்று வளர்த்து விட்டவர்களே அந்த வேறோர் சமயத்தினர்தான். ஒரு புத்த பிக்குவோடு ஒரு பெண்ணைத் தொடர்புபடுத்திப் புரளியைக் கிளப்பிவிட்டவர்களும் அவர்கள்தான். பௌத்தர்கள், கனகநந்தி முனிவர் மீது களங்கங் கற்பித்திட முனைந்தார் கள். அதனாலேயே பசுமலைக் கலவரமும் எழுந்தது." "அப்படியானால் இந்த வழக்குப் புகையினை எழுப்பி விட்ட நெருப்புத் துண்டே, புத்தபிக்குவைப் பற்றிய புரளிதான் என்கிறீர்களா?” "ஆம்; அவையத் தலைவர் அவர்களே! மாரிக்காலத்திலே பிச்சை எடுத்திடும் பொருட்டு வெளியே ஏகிடும் எந்த பிக்குவும் ஏழு நாட்களுக்குள் தங்கள் பௌத்தக் குகைக்குத் திரும்பிட வேண்டும் என்பது பெளத்த சங்க விதி. ஆனால் ஒரு புத்த பிக்கு அவ்வாறு வந்திடவில்லை. அதற்குக் காரணம், மூலிகையொன்றின் மணத்தினால் அவர் மயக்கமுற்று விழுந்துவிட்டதேஆகும். முல்லைத் திணையினைச் சார்ந்திட்ட பெண்ணொருத்தி அவரைத் தன் முதுகிலே சுமந்து வந்து குகையினில் சேர்த்திருக்கிறாள். அதனைக் கண்டு விட்டுத்தான் பிக்குவுக்கும் அந்தப் பூவைக்கும் நெடுங்காலமாகத் தொடர்பு உண்டு என்று புரளியைக் கிளப்பிவிட்டுவிட்டனர். தனக்கு உணவினையே அளித்திடும் பெண்ணாக இருந்த போதிலும் எந்த ஒரு புத்த பிக்குவும் அவளை நிமிர்ந்து பார்ப்பதோ, அவளோடு உரையாடுவதோ, அவளு டைய அழகையோ, அழகின்மையையோ ஊன்றிக் கவனிப்பதோ அறவே கூடாது என்பதும் பௌத்த சங்கத்தின் கடுமையான விதி. தங்களுடைய இந்தச் சங்க விதிக்கே இழுக்கினை உண்டாக்கியதாகப் புத்த பிக்குவின் மீது அபாண்டப் பழியைச் சமணர்கள் சுமத்துகிறார்களே என்கிற ஆத்திரம் உண்டாகி விட்டது பௌத்தர்களுக்கு. அவர்கள் எதிர்க்குற்றச்சாட்டினை எழுப்பிடும் வகையிலே கனகநந்தி முனிவரும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார்."