உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

கலைஞர் மு. கருணாநிதி


504 கலைஞர் மு. கருணாநிதி தந்தையின் கண்ணைக் குத்துவதற்குச் சதி புரிய முயன்றிட்டான் அவன். ஆனால் அவனுடைய சூழ்ச்சி பரந்த உள்ளம் படைத்திட்ட பாவலனும், தனிப்பெரும் பண்பு உடைய நாவலனும், இனக்காவலனுமான இளம்பெருவழுதியிடம் பலித்திடவில்லை. ஒரு கிழமை உருண்டோடிற்று. பெருவழுதிப்பாண்டியன், காரிக்கண்ணனார் உட்படப் பெரியோர் கள். பேரறிஞர்களின் வாழ்த்து மலர்களை மலை மலையாகச் சுமந்த வண்ணம், பொறுப்புமிக்க அந்தப் பதவியினை ஏற்றிட, ரோமாபுரி நோக்கி புறப்பட்டுச் சென்றிட்டான் செழியன். தென்பாண்டிக் கடற்கரையே அன்று திருவிழாக் கோலம் பூண்டு அவனைக் கோலாகலமாக வழியனுப்பி வைத்தது.