உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

503


ரோமாபுரிப் பாண்டியன் 503 களே! கரிகால் சோழரை காப்பாற்றிய பெருமையும் அவனுக்கு உண்டா யிற்றே! எல்லாவற்றுக்கும் மணிமகுடம் சூட்டினாற் போல் அண்மையில் அறங்கூறு அவையத்திலே அவன் நடு நிலைமையோடு அளித்திட்ட சாட்சியத்தைக் கேட்டு நாடே வியந்ததே! இந்நிலையில், அவன் நம் தூதுவனாகச் செல்வதற்கு நம்முடைய மக்கள் எதிர்ப்பினையாவது எழுப்பிடவாவது? என்னால் நம்ப முடியவில்லை தளபதியாரே." - "தாங்கள் மொழிவதைக் கேட்டு என்ன புகல்வதென்றே எனக்குப் புரியவில்லை. செழியன் அறிஞனாக ஆற்றல்மிக்க மறவனாக இருந்திடலாம். ஆனால் அவனுடைய குடிப்பிறப்பு என்ன? பிற்பட்ட குடியினில் பிறந்தோரையெல்லாம் நாம் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்திடலாமா? பிறகு அந்தப் பதவிகளுக்குரிய பெருமை தான் என்ன என்று பெரியவர்கள் சிலர் கேட்கின்றார்கள். அவர்களுக்கு நாம் என்ன மறுமொழி தருவது? "தாங்கள் சொல்வதைக் கேட்டு எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது தளபதியாரே: குடிப்பிறப்புப் பற்றிப் பெருமிதம் பேசிடும் கொடிய பிணி நமது மண்ணையும் தொற்றிக் கொண்டு விட்டதா? மேட்டுக் குடியிலே பிறந்தவர்கள்தான் மேலான பதவிகளைத் தாங்கிடவேண்டும் என்பது என்ன நேர்மை? என்ன நீதி? என்ன அறம்? அதுவும் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்களாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றவர்களே. அதே கடவுளின் குழந்தைகளிடம் உயர்வு தாழ்வு கற்பித்துச் சாதிச் சழக்குகளை ஊடுருவவிட்டு, உயர்ந்த குடியினில் பிறந்தவர்களே மேலும் உச்சிக்குச் சென்றிட வழிவகுக்கலாமா? சதி புரியலாமா? பிற்பட்ட குடியில் பிறந்த ஒருவன் எத்துணைத் திறமைசாலியாக இருப்பினும் பெரிய மனிதன் ஆவதா என்ற வயிற்றெரிச்சல் கொள்ள லாமா? இது அவர்கள் வழிபடுகின்ற தெய்வத்திற்கே அடுக்குமா? அவர் களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தால், அந்த மனச்சாட்சிக்கே அது ஒருப்படுமா? குடிப்பெருமையில்லை என்கிற காரணத்திற்காக ஒருவனு டைய அறிவை - திறமையை இழிவாக எண்ணுவதைப் போன்ற கேவல மான குணம் - நச்சுப் பண்பாடு வேறு எதுவுமே இல்லை. அந்தப் போக் கினை நான் அறவே வெறுக்கிறேன். மேட்டுக்குடிப் போக்கினை நான் அறவே வெறுக்கிறேன். மேட்டுக் குடியினில் பிறந்திருப்பதாகப் பீற்றிக் கொள்ளும் அந்த அகங்காரர்களின் வாயினை அடைப்பதற்காகவேனும் செழியனைத்தான் நாம் தூதுவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திட வேண்டும்; மன்னர் அவனைத் தேர்ந்தெடுத்தது முழுக்க முழக்கச் சரியானதே!" என்று அழுத்தமாக மொழிந்திட்டான் இளம்பெருவழுதி. தன்னைத் தூதுவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்திடவில்லையே என்கிற ஆத்திரம் நெடுமாறனுக்கு. எனவே, தனயனின் கரத்தினைக் கொண்டே