உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

கலைஞர் மு. கருணாநிதி


502 கலைஞர் மு. கருணாநிதி "என்ன இவ்வளவு சாதாரணமாகக் கூறிவிட்டீர்கள், இளவரசர் அவர்களே! இன்று இந்தப் பாண்டிய மண்டலம் முழுவதுமே என்ன எதிர்பார்க்கிறது; என்ன பேசிக் கொண்டிருக்கிறது தெரியுமா?" “என்ன பேசிக் கொண்டிருக்கிறது?" ரோமாபுரி நாட்டுக்குத் தூதுவராகச் சென்றிடக் கூடிய தகுதியும் திறமையும் படைத்த ஒரே தலைவர் தாங்களே என்றுதான் நாட்டு மக்கள் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்."

“அப்படியா? நான் அதைப்பற்றிச் சிந்தித்திடவே இல்லையே!" "தாங்கள் வேண்டுமானால் பதவி ஆசை இல்லாதவராக - தாமரை இலைத்தண்ணீராக - ஒதுங்கி இருந்திட முற்படலாம். ஆனால் நல்லவர் கள், நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அவ்வாறெல்லாம் கண்ணைப் பொத்திக்கொண்டு வாளா இருந்திட முடியுமா? அதனால்தான் தங்களைத் தூதுவராக அனுப்பி வைத்திட வேண்டும் என்று எல்லாரும் விரும்புகின்றார்கள்: நானும் விரும்புகின்றேன். எனினும் நமது மன்னர் அவர்களோ வேறுவிதமாக முடிவு செய்திருப் பதாகத் தெரிகிறது. அதைக்கேட்டு நாடே கொந்தளிப்பில் ஆழ்ந்திடுமோ என அஞ்சுகிறேன்" "மன்னர், யாரை அனுப்புவதற்கு முடிவு செய்திருக்கிறார்?" “மிகமிகச் சாதாரணக் குடியில் பிறந்து - மெய்க்காவல் மறவனாக அலுவல் பார்க்கிறானே செழியன்; அவனைப் போய்த் தேர்ந்தெடுத்திருக் கிறாராம்." செழியன்தானா? அப்படியானால் அது மிகச்சிறந்த தேர்வு ஆயிற்றே! 'என்ன இளவரசே இப்படிக் கூறிவிட்டீர்கள்? செழியன் யாரென்று தங்களுக்குத் தெரியுமா?" "ஓ! நன்றாகத் தெரியுமே? அவனுக்கு ஈடாக நான் என்ன, நம்மவர்களில் யாருமே இல்லை என்று நான் துணிந்து கூறிடுவேன். அவன், சுறுசுறுப்பு மிகுந்தவன்; தூங்காமல் உழைப்பவன்; நம்பிக்கைக்கு உரியவன்; நாணயம் நிறைந்தவன்; கருணையுள்ளம் கொண்டவன்; கடமையாற்றுவதில் வல்லவன்; அரசுக்கு உண்மையோடு தொண்டாற் றிடும் பொழுதே ஏழைகளின் சிரிப்பிலே இறைவனைக் காணத்துடிப் பவன்; அவன் அடக்கமானவன்; வயதில் இளையவன் என்பதனால் எதையுமே அறிந்திடாதவன் என்று இளக்காரமாக எண்ணிடாதீர்கள்! அவனுடைய ஆற்றலைப் பற்றித்தான் நாட்டுமக்கள் நன்றாக அறிவார்