ரோமாபுரிப் பாண்டியன்
567
ரோமாபுரிப் பாண்டியன் மேசனசுக்கும் ஏதோ ஐயப்பாடு எழுந்துவிட்டது. 567 "நான் உரைத்தவற்றையெல்லாம் முழுவதுமாக அவரிடம் நீ மொழி பெயர்த்திட்டதாகத் தெரியவில்லையே!" என்று இலத்தீனில் கூறினார் அவர். இதற்குள் அகஸ்டசின் மனைவி லிவியா இடைமறித்திட்டாள். "ஆமாம், மேசனஸ்என்ன கேட்கிறார். ஜூனோ? "ம்.. தமிழகத் தூதுவர் அந்தக் காண்டாமிருகத்தோடு சண்டைபோட வேண்டுமாம்!' +1 'அப்படியா' என்று வியந்திட்ட லிவியாவின் பார்வை இப்போது மேசனசை நோக்கித் திரும்பிற்று "அவர் எதற்கு அவ்வாறு மிருகங்களோடு போய்ச் சண்டை போட வேண்டும் - அழுத்தமாகவே கேட்டாள் லிவியா. "ஒரு வேடிக்கைதான்! அத்துடன் பலபேரை மாய்த்திடும் ஒரு விலங்கினை வீழ்த்தினார் என்றால் அவருடைய வீரத்திற்கும் வெற்றிப் பெருமிதந்தானே." 'அவர் இங்கு வந்திருப்பது மற்போர்த் திறனைக் காட்டிட அல்ல; நட்புறவை நாட்டிட! மேலும் அவர் என்ன சாதாரண கிளேடியேட்டரா? அல்லது மரண தண்டனையோ, கடுங்காவல் தண்டனையோ பெற்ற கைதியா? அவரைப் போய் ஒரு மிருகத்தோடு சண்டை போடச் சொல்வது, அவரை அவமானப்படுத்துவதற்கே ஒப்பாகும்". "நீ சொல்வதைக் கேட்கும்பொழுது எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. விலங்கோடு சண்டை போடுவதை அவமானமாக கருதுகிற வன் உண்மையான வீரனாக இருந்திட முடியுமா? சரி, இப்போது அடித்தளத்திலுள்ள ஒரு காண்டாமிருகம் வெறி பிடித்துப்போய் மேலே ஏறி வந்து எல்லாரையும் தாக்கிட முற்பட்டால்... அப்போது ஒரு ஆண்மகன் அதனை அடக்கிடத்தானே வேண்டும்; அவ்வாறு அடக்குவது அவமானம் ஆகிவிடுமா?" "அந்த மாதிரி ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும்பொழுது வந்துள்ள அத்தனை பேர்களுடைய உயிரை மட்டுமல்ல, உங்களுடைய உயிரையும் சேர்த்துக் காப்பாற்றித் தந்திடுவார் இந்தத் தமிழக தூதுவர்; கவலைப்படாதீர்கள்” என்று கேலியாக நகைத்திட்டாள் லிவியா. அவர்கள் உரையாடிக்கொண்டதை உடனுக்குடன் மொழி பெயர்த் திடுமாறு ஜூனோவை வற்புறுத்திக்கேட்டு அறிந்து கொண்ட செழியன்